உலகில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளில் சீனா முதன்மையான இடத்தில் இருக்கும் வேளையில் 3வது முறையாக ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சீனாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், வளர்ச்சி திட்டங்கள், நிர்வாக முடிவுகள், ராணுவ முடிவுகள் அனைத்தும் கடந்த 10 வருடத்தில் எப்படியிருந்ததோ அதே போலத் தான் இருக்கும். இதனால் ஜி ஜின்பிங் ஆட்சியில் கடந்த சில வருடத்தில் பாதிக்கப்பட்ட டெக் நிறுவனங்கள் மீண்டும் பாதிக்கப்பட உள்ளது.
இதற்கு ஏற்றார் போல் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் பெரும்பாலானவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங் மீண்டும் ஆட்சிக்கு வந்த காரணத்தால் அவருடைய திட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்காது, இதேபோல் Politburo குழுவில் பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தம் செய்பவர்கள் சிலரையும் ஜி ஜின்பிங் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மாற்றியுள்ளார்.
சீன டெக் நிறுவனங்கள்
ஜி ஜின்பிங் ஆட்சியில் கடந்த 3 வருடத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது சீன டெக் நிறுவனங்கள் தான், இந்த நிலையில் சீனாவின் அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் வந்த நிலையில் அலிபாபா, டென்சென்ட் பங்குகள் வீழ்ச்சி அடையத் துவங்கியது.
ஹாங்காங் பங்குச்சந்தை
ஜி ஜின்பிங் 3வது அதிபராக அறிவித்ததை அடுத்து ஹாங்காங் பங்குச்சந்தை குறியீடான Hang Seng 6.2 சதவீதம் சரிந்து 2009 ஆம் ஆண்டுக்குக் கீழ் சரிந்தது. ஹாங்காங் சந்தையில் அலிபாபா பங்குகள் 12 சதவீதமும், டென்சென்ட் பங்குகள் 10 சதவீதமும் சரிந்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்குச் செக்
இதேபோல் ஜி ஜின்பிங் இந்த ஆட்சியிலும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையிலும், அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் தொடர்ந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் சீனாவின் ரியல் எஸ்டேட் பிரச்சனை, சீனா-வின் கடன் வலை தொடருமான என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் 5 ஆண்டுக் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில் கடந்த 10 வருடமாகச் சீன அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங் மீண்டும் தன்னை 3வது முறையாக அடுத்த 5 ஆண்டுக்கு அந்நாட்டின் அதிபராக அறிவித்துக்கொண்டார்.
Politburo குழு
எப்படித் தன்னைத் தானே ஒருவரை அதிபராக அறிவித்துக்கொள்ள முடியும் என்று தானே கேட்டுக்குறீங்க.. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவில் மொத்தம் 7 பேர், இந்த 7 பேர் கொண்ட குழுவை Politburo Standing Committee என அழைக்கப்படுகிறது. இக்குழவின் தலைவர் தான் சீனா-வின் அதிபராக நியமிக்கும் அதிகாரத்தைப் பெறுவார். இப்படி இக்குழுவின் தலைவராக இருப்பவர் ஜி ஜின்பிங்.
மாற்றம்
ஜி ஜின்பிங் 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற உடனே Politburo Standing Committee-யில் உள்ளவர்களை மாற்றியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜி ஜின்பிங் கைது, சீனாவில் ராணுவ ஆட்சி, சில முக்கியமான அரசியல் தலைவர்களுக்குத் தூக்குத் தண்டனை போன்ற செய்திகள் வந்தது.


Click it and Unblock the Notifications