அலிபாபா ஜாக் மா எங்கே..? சீனாவில் ஆளக் காணோம்.. குடும்பத்துடன் ஜாப்பானுக்கு ஓட்டமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்று அலிபாபா. இதன் தலைவர் தான் ஜாக் மா. பல மாதங்களுக்கு மேலாக காணவில்லை. இவர் சீன அரசால் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஜாக் மா காணாமல் போய்விட்டார் என வதந்திகள் பரவின.

 

பல மாதங்களாகவே ஜாக் மா வெளியில் எங்கும் நடமாடுவதையோ, எந்த விதமான பேட்டிகளோ வெளியாகவில்லை. சொல்லப்போனால் ஜாக் மா குறித்தான எவ்விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது மேற்கொண்டு பல கேள்விகளை எழுப்பியது. ஜாக் மா எங்கு இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது? ஏன் அவரை காண முடியவில்லை என பல கேள்விகளும் எழுந்தன.

சீனாவின் கடும் கோபத்துக்கு ஆளாகும் ஜாக் மா... டிரம்பை ஏன் சந்தித்தார்.. உண்மை தான் என்ன..?சீனாவின் கடும் கோபத்துக்கு ஆளாகும் ஜாக் மா... டிரம்பை ஏன் சந்தித்தார்.. உண்மை தான் என்ன..?

கடுமையான மோதல் போக்கு

கடுமையான மோதல் போக்கு

குறிப்பாக சீன அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில், சீன அரசுக்கும் ஜாக் மாவுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும் இது குறித்து எந்த விதமான அறிவிப்புகளும் வெளியாகமலேயே இருந்தது.

டோக்கியோவில் ஜாக் மா இருக்காரா?

டோக்கியோவில் ஜாக் மா இருக்காரா?

இந்த நிலையில் தான் பல மாதங்களாகவே எங்கும் வெளிப்படாத ஜாக் மா, சுமார் 6 மாதங்களாக ஜப்பானின் தலை நகர் டோக்கியோவில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது சீன அரசு தொடர்ந்து தொழில் நுட்பத் துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததை அடுத்து, ஜாக் மா காணமல் போனதாக தகவல்கள் வெளியாகின.

குடும்பத்துடன் ஜப்பானிலா?
 

குடும்பத்துடன் ஜப்பானிலா?

சீனாவின் மிக பெரிய பில்லியனரும், சிறந்த தொழிலதிபருமான ஜாக் மா, சுமார் ஆறு மாதங்களாக தனது குடும்பத்தினருடன் டோக்கியோவில் வசித்து வருவதாக பைனான்ஷியல் டைம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜாக் மா இங்கிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளதாகவும் தெரிகிறது.

மோனோபாலி கொள்கை

மோனோபாலி கொள்கை

சீனாவின் கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பே ஜாக் மா, பொது வெளியில் காணவில்லை என்ற பர பரப்பு தொற்றிக் கொண்டது.

சீனா அரசாங்கத்திடம் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் சீனாவில் மிகப்பெரிய அளவில் பொது பங்கு வெளியீட்டை செய்ய திட்டமிட்ட இந்த நிறுவனத்தின் மீது, அலிபாபா மோனோபாலி கொள்கை விதிமுறைகளுக்கு எதிரானது என சம்மன் அனுப்பப்பட்டது.

அலிபாபாவுக்கு இது முதல் அடி

அலிபாபாவுக்கு இது முதல் அடி

மோனோபாலி என்பது அந்த சந்தையில், அந்த நிறுவனத்தினை தவிர வேறு யாரும் போட்டியிட முடியாத சூழலை உருவாக்கும் என்பதாலே, இப்படி ஒரு தக்க நடவடிக்கையை சீன அரசு எடுத்திருக்கலாம் என கூறப்பட்டது. இதுவே அலிபாபாவுக்கு விழுந்த முதல் அடியாகவும் இருந்தது.

இது தான் காரணம்

இது தான் காரணம்

ஒரு பொருளை அலிபாபா நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றால், அதனை வேறு எந்த நிறுவனத்திற்கும் விற்க முடியாது. ஓரு வேளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவேண்டுமேனில் அலிபாபாவிடம் விற்க முடியாது. இது தான் அந்த நிறுவனத்தின் சிக்கலான விதிமுறை. இது தான் சீனா அரசு நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது.

கோபத்திற்கு முக்கிய காரணம் இது தான்?

கோபத்திற்கு முக்கிய காரணம் இது தான்?

எனினும் சீன அரசின் கடும் கோபத்திற்கு இது மட்டும் காரணம் அல்ல. அலிபாபாவின் கொள்கையை ஏற்றுக் கொண்டால், அலிபாபா வேகமாக வளர்ச்சி காணும். ஆனால் மற்ற நிறுவனங்கள் இதனால் வீழ்ச்சி காணலாம் என்பதும் ஒரு காரணம். அதோடு அரசியல் ரீதியான ஒரு காரணமும் சீனா அரசிடம் இருந்தது. அது சீன வங்கியாளர்கள் இருந்த சபையில் அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனத்தையும் செய்தார். மேலும் நிதித்துறையில் புதுமைகளை புகுத்தவும், வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சரியான நிர்வாக அமைப்பு இல்லை என பரபர குற்றச்சாட்டையும் வைத்தார்.

 சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சை

சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சை

இப்படி அடுத்தடுத்த பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தான் ஜாக் மா மாயமானார். அடுத்த சில மாதங்களில் அலிபாபா குழுமம் பெரும் சிக்கலை சந்தித்த நிலையில் தான், அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பானது பெரும் சரிவினைக் கண்டது. இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த ஜாக் மா வெளியில் அதிகம் காணப்படாத நிலையில் பல விதமான விமர்சனங்கள் வெளியாகின. தற்போது அவர் ஜப்பானில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alibaba founder jack ma living in tokyo for almost 6 months

Jack Ma, the chairman of Alibaba, has been missing for more than several months, but it has been reported that he has been living in Tokyo, the capital of Japan for about 6 months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X