ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா அந்நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக இருப்பது மட்டும் அல்லாமல் புதிய கண்டுப்பிடிப்புகளில் முன்னோடியாக உள்ளது. எத்தனால், ஹைட்ரஜென், எலக்ட்ரிக் வாகனத்துடன் சோலார் பேனல் இணைப்பு என கார் தயாரிப்பில் பெரும் மாற்றத்தை செய்துக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஜப்பான் நாட்டில் டோயோட்டா-வின் 14 தொழிற்சாலைகளில் இருக்கும் 24 அசம்பிளி லைன்களும் ஒரே நேரத்தில் முடங்கியது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யப்பட்ட போது, வெளியில் இருந்து வரும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் டோயோட்டா நிறுவனத்துடைய கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் மறுபுறம் டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வதந்தி பெரியதாக வெடிக்கும் முன் அடக்க வேண்டும் என்பதற்காக 24 அசம்பிள் லைன்களும் முடங்க சைபர் அட்டாக் காரணமில்லை, ஆனால் இதற்கான சரியான காரணத்தை கண்டுபடிக்க ஆய்வு செய்ய உள்ளோம் என ஜப்பான் டோயோட்டா செய்திதொடர்பாளர் Sawako Takeda தெரிவித்தார்.
மேலும் ஜப்பான் நாட்டின் டோயோட்டா நிறுவனத்தின் 14 தொழிற்சாலைகளில் இருக்கும் 24 அசம்பிளி லைன்களும் எப்போது இயங்க துவங்கும் என தெரியவில்லை, இதனால் இந்த கார் மாடல்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரியவில்லை. இதனால் டோயோட்டா கார் வாங்க திட்டமிடுவோர் குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா, தென் கிழக்கு நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கொரோனா தொற்று காலத்தில் கார் உற்பத்திக்கு தேவையான கம்ப்யூட்டர் சிப் மற்றும் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு பாதிப்பாலும், மக்கள் அருகில் நின்று செயல்பட அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் ஜப்பான் தொழிற்சாலைகள் இயங்கப்படாமல் சில வாரங்கள் மூடப்பட்டது. இதன் பின்பு தற்போது கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக மூடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான டோயோட்டா கார்கள் பெங்களூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் டோயோட்டா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஹைப்ரிட் கட்டமைப்பு தான் இந்திய கார்களின் அடிப்படை கட்டமைப்பாக உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை ஆகஸ்ட் 29, செவ்வாய்க்கிழமை 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா காரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications