2017ஆம் ஆண்டின் 2வது காலாண்டு முடிவுகளை கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் வெளியிட்டுள்ளது.
வழக்கம் போல் கூகிள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூகிள் சர்ச், ஆண்டிராய்டு மற்றும் யூடியூப் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயே அதிகமாக உள்ளது.
அதேபோல் நிறுவனத்தின் பெரு பகுதி லாபமும், கூகிள் நிறுவனத்தின் வாயிலாகவே ஆல்பபெட் நிறுவனத்திற்கு வருகிறது.
அபராதம்
ஐரோப்பிய யூனியன், கூகிள் நிறுவனத்தின் மீது 2.7 பில்லியன் டாலர் அபராதம் விதித்த நிலையில் இந்நிறுவனத்தின் லாபம் குறையும் எந எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் நிலையான லாபத்தை பெற்றுள்ளது ஆல்பபெட்.
வருமானம்
முதல் காலாண்டில் மொத்த வருமானமாக 6.87 பில்லியன் பெற்ற நிலையில் அபராதம் போக சுமார் 4.1 பில்லியன் டாலரை வருமானமாக பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும் போது சுமார் 15 சதவீதம் அதிகமாகும்.
மூன்ஷாட் திட்டங்கள்
மேலும் ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மூன்ஷாட் திட்டங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் 248 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 34 சதவீதம் அதிகமாகும்.
புதிய வருவாய்
இந்நிலையில் இக்காலக்கட்டத்தில் கூகிள் நிறுவனது புதிய வருவாய் தளமாக கூகிள் ஹோம் மற்றும் கூகிள் வைபை காட்டியுள்ளது. இது கூகிள் நிறுவனத்தின் புதிய வன்பொருள் துறை.


Click it and Unblock the Notifications