உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் சேவை நிறுவனமான அமேசான் கடந்த வருடமே 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிலையற்ற பொருளாதாரம் மற்றும் அளவுக்கு அதிகமாக ஊழியர்களைப் பணியில் சேர்த்த காரணத்தால் ஜனவரி 18 முதல் 18000 ஊழியர்களுக்கும் அதிகமாகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தப் பணிநீக்க அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனவரி 5 ஆம் தேதி ஈமெயிலில் அனுப்பியுள்ளார்.
ஆண்டி ஜாஸ்ஸி
இந்த ஈமெயிலில் நவம்பர் மாதம் ஏற்கனவே ஆட்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தற்போது 18000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளதாக ஆண்டி ஜாஸ்ஸி தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
முக்கியப் பிரிவு
அமேசான் கடந்த முறை டெக் பிரிவில் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், ஜனவரி 18 ஆம் தேதி முதல் துவங்க உள்ள பணிநீக்க நடவடிக்கையில் அதிகப்படியான ஊழியர்கள் அமேசான் ஸ்டோர்ஸ் மற்றும் PXT பிரிவுகளில் இருந்து தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதில் PXT பிரிவு என்பது வாடிக்கையாளர் சேவைக்குப் பெயர் போன அமேசான் நிறுவனத்தின் மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தான் இந்த PXT பிரிவு.
முடிவை எளிதாக எடுக்கவில்லை
மேலும் ஆண்டி ஜாஸ்ஸி இந்தப் பணிநீக்கம் அனைத்துத் தரப்பு ஊழியர்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இந்த முடிவை நாங்கள் எளிதாக எடுக்கவில்லை என மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.
உதவிகள்
மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உதவுவது முக்கியக் கடமையாகக் கருதும் நிலையில் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வெளியேறுவதற்கான ஊதிய திட்டம், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம், வேறு வேலைக்கு மாறக் கூடிய வாய்ப்பு போன்ற அனைத்தும் அளிக்க உள்ளதாக ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 18 முதல்
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரி 18 முதல் அறிவிப்புகள் வெளியாகும். 2023 ஆம் ஆண்டில் உலகில் 3ல் ஒரு பங்கு நாடுகள் ரெசிஷனுக்குள் தள்ளப்படும் என ஐபிஎம் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் பொருளாதார அளவில் அதிகளவில் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி உயர்வு குறித்த சிக்னல் இதுவரையில் வெளியிடவில்லை.
அமேசான் அதிர்ச்சி
ஆனாலும் அமேசான் சுமார் 18000-த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமேசான் ஏற்கனவே 2022ல் கடைசி இரண்டு மாதத்தில் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது என்பது தான்.


Click it and Unblock the Notifications