1,178 கோடி ரூபாய்க்கு வீடா..? இதிலும் சாதனை படைத்த அமேசான் ஓனர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் 165 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 1,178 கோடி ரூபாய்) மதிப்பிலான ஒரு வீட்டினை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த புதிய வீடு மொகுல் டேவிட் கெஃபெனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

பெவர்லி ஹில்ஸில் உள்ள பெசோஸின் புதிய மாளிகை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலேயே மிக விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

வீடு தேடல்

வீடு தேடல்

இதற்கு முந்தைய சாதனை கடந்த ஆண்டு ரூபோர்ட் முர்டோக்கின் மகன் லாச்லன் சார்ட்வெல் தோட்டத்திற்கு 150 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1,071 கோடி ரூபாய்) செலுத்தியதாக இருந்தது. கடந்த வாரம் பெசோஸ் தனது காதலி லாரன் சான்செஸூடன் ஒரு புதிய வீட்டைத் தேடுவதாக செய்திகள் வெளியாகின.

யாருடைய வீடு?

யாருடைய வீடு?

அமேசான் நிறுவனர் வாங்கியிருக்கும் இந்த புதிய வீடு முதன் முதலில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனர் ஜாக் வார்னருக்காக 1930ல் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த எஸ்டேட் பல ஸ்டியோ மொகல்களின் வீடுகளைப் போலவே வார்னரின் கடின வெற்றியின் அடையாளமாக இருந்தது. இது 1978ல் தனது 86 வயதில் ஜாக் வார்னர் இறந்த பிறகு அவரது மனைவி ஆன் எஸ்டேட்டிலேயே தங்கியிருந்தார்.

என்னென்ன வசதிகள்
 

என்னென்ன வசதிகள்

பிறகு 1990ஆம் ஆண்டில் ஆன் வார்னரின் மரணத்திற்கு பிறகு, மொகுல் டேவிட் கெஃபென் இந்த எஸ்டேட்டினை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பெசோஸ் மற்றும் கெஃபென் நீண்டகால நண்பர்கள் எனவும் செய்திகள் கூறப்படுகிறது. பெவர்லி ஹில்ஸ் வீடு 13,600 சதுர அடியில் பரவியுள்ளது. இதில் விரிவான மொட்டை மாடிகள் மற்றும் தோட்டங்கள் இரண்டு விருந்தினர் மாளிகைகள், நர்சரி மற்றும் மூன்று ஹாட்ஹவுஸ் டென்னிஸ் கோர்ட், நீச்சல் குளம், ஒன்பது துளை கோல்ப் மைதானம் மற்றும் மோட்டார் கோர்ட் ஆகியவை உள்ளன.

ஏற்கனவே இரண்டு மாளிகை

ஏற்கனவே இரண்டு மாளிகை

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் பெசோஸ் ஏற்கனவே இந்த பெவர்ஸ் ஹில்ஸில் இரண்டு மாளிகையை வைத்துள்ளாராம். ஒன்று 11,891 சதுர அடி அளவுள்ள வீடு 24 மில்லியன் டாலருக்கும் மற்றும் 12.9 மில்லியன் டாலர் மதிப்புள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன.

பெரிய சொத்து

பெரிய சொத்து

இந்த நிலையில் தான் பெவர்லி ஹில்ஸில் 165 மில்லியன் டாலர் மதிப்பினால இந்த சொத்தினை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதை அறிந்த நபர்கள் கூறியுள்ளனர். ஜெஃப் பெசோஸின் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்தில் ஏற்கனவே டெக்சாஸில் 1,70,000 ஹெக்டேர் (4,20,000 ஏக்கர்) உள்ளதாகவும் கூறப்படுகிறது, ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மட்டும் அல்ல, இதிலும் நான் டாப்பு தான் என்று சொல்லும் வகையில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மிக விலை உயர்ந்த வீடு இது தான் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon CEO jeff bezos gifts most expensive house worth Rs.1,178 cr to his girlfriend

Amazon chief excutive officer jeff bezos purchased a new home that costs Rs.1,178 cr.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X