ஏஐ பயன்பாடு அதிகரித்த நாளில் இருந்து பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரையில் பணிநீக்கம் என்பது தினசரி கதையாக மாறியுள்ளது. இப்படியிருக்கையில் உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமாந அமேசான் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதேபோல் இந்தியா, அமெரிக்காவில் பணிநீக்கம் செய்வது போல் ஐரோப்பாவில் பணிநீக்கம் செய்துவிட முடியாது. அங்கு லேபர் சட்டம் மிகவும் கடுமையானது என்பதால் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு அமேசான் அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
அமேசான் நிறுவனம் தனது ஐரோப்பா தலைமையகமான லக்சம்பர்க்கில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 370 பேரை பணியில் இருந்து நீக்க உள்ளது. இது லக்சம்பர்க் அலுவலகத்தில் இதுவரை செய்யப்பட்ட பணிநீக்கத்தில் இதுதான் அதிகப்படியான பணிநீக்கம்.

லக்சம்பர்க் அலுவலகத்தில் தற்போது 4,370 ஊழியர்கள் உள்ள நிலையில் இது தற்போது பணிநீக்கம் செய்யப்படும் 370 ஊழியர்கள் மூலம் சுமார் 8.5 சதவீத ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட உள்ளனர். அக்டோபர் மாதம் அமேசான் தனது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 14,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது ஐரோப்பிய தலைமையகத்தில் பணிநீக்கம் நடக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை நிறுவனத்தின் வர்த்தகத்திலும், மேம்பாட்டிலும் அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணம். இந்த பணிநீக்கத்தில் சாப்ட்வேர் டெவலப்பர்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்று ப்ளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.
AI தொழில்நுட்பம் நிறுவனத்தில் கோடிங் பணிகளை தானாக செய்ய ஆரம்பித்துள்ளதால் மனித ஊழியர்களின் தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக கூகுள் முதல் அமேசான் வரையில் அனைத்து பெரிய அமெரிக்க டெக் நிறுவனத்திலும் பணிநீக்கம் நடத்து வருகிறது.
அமேசான் முதலில் லக்சம்பர்க் அலுவலகத்தில் 470 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் ஐரோப்பிய யூனியன் விதிப்படி ஊழியர் பிரதிநிதிகளுடன் இரு வார பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த பணிநீக்கம் சுமார் 370ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் பணிநீக்க திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமேசான் மட்டும் அல்லாமல் உலகளவில் அனைத்து நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி செலவை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தினசரி செய்யப்பட்டும் எளிய வேலைகள் அனைத்தும் ஆட்டோமேட் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் கடினமான வேலைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வேலைகள் எளிமையாக்கப்பட்டு வருகிறது.
இதனால் மனித உழைப்பு தேவைப்படாத அனைத்து டிஜிட்டல் சேவை, டிஜிட்டல் துறையில் இத்தகைய பணிநீக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது. இனி வரும் காலக்கட்டத்திலும் இந்த பணிநீக்கம் தொடர்ந்து நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI தொழில்நுட்பம் பல பணிகளை எளிதாக்கி மனித ஊழியர்களின் தேவையை குறைக்கிறது.
இதனால் ஏஐ காட்டிலும் மக்கள் சிறப்பாக செயல்படும் அளவுக்கு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், அல்லது ஏஐ பயன்படுத்தி சிறப்பாக பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பணிநீக்கத்தில் இருந்து தப்பிக்க இதுதான் ஓரே வழி.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications