'பில் கேட்ஸ்' இடத்தை பிடிக்க ஜெஃப் பிசோஸ் போட்டி..!

உலகளவிலான பில்லியனர்கள் பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களை, சார்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது இன்றைய நவீனமயமான உலகில் பெரிய விஷயம் இல்லை.

ஆயினும் பல வருடங்களாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனரான பில் கேட்ஸ் உடன் போட்டி போட புதிதாக ஒருவர் உருவாகியுள்ளார். அவர் தான் ஜெஃப் பிசோஸ். யார் இவர்..?

டெக் உலகம்

டெக் உலகம்

2000வது ஆண்டுக்குப் பின் உலகளவில் மக்களின் வாழ்க்கை முறையில் டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது. பாத்ரூம் முதல் சவ கிடங்கு வரை என அனைத்து இடங்களிலும் தொழில்நுட்பத்தை நாம் பார்த்து வருகின்றோம்.

இந்நிலையில் உலகளவில் பில்லியனர்கள், அதாவது பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள டெக் நிறுவனங்களின் தலைவர்களை யார் யார் என்பதைப் பார்க்கும் முன் அதிக டெக் பில்லியனர்களைக் கொண்டு நாடு எது தெரியுமா..?

 

அமெரிக்கா

அமெரிக்கா

ஆம், நீங்கள் கணித்தது சரிதான். அதிக டெக் பில்லியனர்களைக் கொண்டு நாடுகள் பட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்கா (51 பேர்), சீனா (19 பேர்), கனடா (5 பேர்), ஜெர்மனி (4 பேர்), தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா 3 பேர், தைவான், இஸ்ரேல், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தலா 2 பேர், பிரிட்டன், சிங்கப்பூர், ரஷ்யா, பிரேசிஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உள்ளனர்.

சரி வாங்க, பில்கேட்ஸ் உடன் போட்டி போடும் ஜெஃப் பிசோஸ் மற்றும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள தலைகளைப் பார்போம்.

 

10 வது இடம்

10 வது இடம்

உலகின் முன்னணி கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் விற்பனை நிறுவனமான டெல் நிறுவனத்தின் தலைவர் மைக்கெல் டெல் இப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவருடையைச் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர்.

 

டென்சென்ட் இன்க்

டென்சென்ட் இன்க்

சீனாவின் மிகப்பெரிய இண்டர்நெட் மற்ரும் மொபைல் மெசேஜிங் சேவை நிறுவனமான டென்சென்ட் இன்க் நிறுவனத்தின் தலைவர் மா ஹூவாடெங் 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவருடைய சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர்.

 

அலிபாபா..

அலிபாபா..

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனத்தைத் தலைவரான ஜாக் மா 25.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டாப் 10 பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்டீவ் பால்மர்

ஸ்டீவ் பால்மர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பலருக்கும் அறிந்திராத ஒரு முகம் என்றால் ஸ்டீவ் பால்மர், இவரது தலைமையில் இந்நிறுவனத்தின் எண்டர்பிரைசர்ஸ் சேவை பல மடங்கு விரிவாக்கமும், வர்த்தகத்தையும் பெற்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 55 சதவீத வருமானம் இப்பிரிவில் இருந்து வருகிறது. இவர் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

 

கூகிள் தலை..

கூகிள் தலை..

கூகிள் நிறுவனம் எதிர்காலத் தொழில்நுட்பத்தை மக்களுக்கு எப்படிக் கொண்டு சேர்ப்பது என்பதில் மிகப்பெரிய அளவிலான ஆராய்ச்சியைச் செய்து வருகிறது.

இதில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று தனது தேடல் மற்றும் விளம்பரம் வர்த்தகத்தைக் கூகிள் பெயரிலும், பிற முக்கிய ஆராய்ச்சி திட்டங்களை ஆல்பபெட் என்ற புதிய நிறுவனத்தைச் சில மாதங்களுக்கு முன் உருவாக்கியது.

இந்த ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவர் தான் செர்ஜி பிரின், இவரின் சொத்து மதிப்பு 38.2 பில்லியன் டாலருடன் டாப் 10 பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

லேரி பேஜ்

லேரி பேஜ்

ஆல்பபெட் நிறுவனத்தின் தலைவர் பதவியைச் செர்ஜி பிரின் ஏற்றுக்கொண்ட நிலையில், கூகிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லேரி பேஜ் ஆல்பபெட் நிறுவனத்தின் சீஇஓவாகப் பதிவி வகிக்கிறார்.

இவருடைய மொத்த சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலர்.

 

லேரி எலிசன்

லேரி எலிசன்

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள்-இன் தலைவர் மற்றும் தலைமை டெக்னாலஜி அதிகாரியான லேரி எலிசன் 51.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் -இன் நிறுவனர் மற்றும் தலைவரான மாரக் ஜூக்கர்பெர்க் மிகவும் குறைந்த காலத்தில் அதிகப் பணத்தைச் சம்பாதித்தவர்.

இவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப இவரின் சொத்து மதிப்பும் மாறும், காரணம் இவருடைய மொத்த சொத்தே இந்நிறுவனத்தின் பங்குகள் தான்.

இந்நிலையில் மாரக் ஜூக்கர்பெர்க்-இன் மொத்த சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர்.

 

ஜெஃப் பிசோஸ்

ஜெஃப் பிசோஸ்

உலகின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் தான் இந்த ஜெஃப் பிசோஸ்.

கடந்த சில வருடங்களில் இந்நிறுவனத்தின் கிளவுட் சேவை உலகச் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்றது. இதனால் ஜெஃப் பிசோஸ்-இன் சொத்து மதிப்பு மளமளவென் உயர்ந்தது.

தற்போது ஜெஃப் பிசோஸ் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 66.2 பில்லியன் டாலர். இவர்தான் டெக் உலகில் பில்கேட்ஸ் உடன் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ள ஒருவர். டாப் 10 பட்டியலில் இவர் பெற்றுள்ள இடம் 2.

 

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் மற்றும் பில் அண்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையில் சொந்தகாரரான பில் கேட்ஸ் டெக் பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இவருடைய சொத்து மதிப்பு 78 பில்லியன் டாலர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+