உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் செலவுகளை குறைப்பதில் அதிகப்படியான கவனத்தை செலுத்த துவங்கியுள்ளது. ஏற்கனவே பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டெக் நிறுவனங்கள் தொடரும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி 2வது ரவுண்டு பணிநீக்கம் முதல் ஊழியர்களுக்கு நிறுவனம் அளிக்கும் சலுகை வரையில் அனைத்தையும் தடுத்து வருகிறது.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான Amazon.com Inc ஏற்கனவே 2 அறிவிப்பு மூலம் சுமார் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதிகம் வருமானம் ஈட்ட முடியாத அதன் வீடியோ-கேம் பிரிவுகளில் இருந்து சுமார் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கேமிங் பிரிவு: இந்த பணிநீக்கத்தின் வாயிலாக ப்ரைம் கேமிங், கேம் குரோத், மற்றும் நிறுவனத்தின் சான் டியாகோ ஸ்டுடியோவில் உள்ள ஊழியர்கள் தங்களது பணியை இழக்க உள்ளனர். இது மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட வர்த்தக திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்படாவிட்டாலும், கிடப்பில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி இதுதான் டார்கெட்: அமேசான் நிர்வாகம் கன்டென்ட்-ல் கவனத்தை ஆதரிக்க எங்கள் ஊழியர்கள் மற்றும் ஆதாரங்கள் சீரமைக்கப்படுகிறது என அமேசான் நிறுவனத்தின் கேம்ஸ் பிரிவின் துணைத் தலைவர் கிறிஸ்டோஃப் ஹார்ட்மேன் செவ்வாயன்று ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் தெரிவித்தார். பணிநீக்கம் அமேசான் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் நடக்கிறது.
கேமிங் பிரிவு: அமேசான் பணிநீக்கத்தின் முக்கிய பகுதியாக கேமிங் பிரிவு இதில் மாட்டிக்கொண்டு உள்ளது. மேலும் வரும் காலத்தில் புதிய முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம், மேலும் எங்கள் திட்டங்கள் முன்னேறும்போது இப்பிரிவு ஊழியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து வளரும் என தெரிவித்துள்ளார் கிறிஸ்டோஃப் ஹார்ட்மேன்.
ட்விட்ச் நிறுவனம்: ட்விட்ச் ஸ்ட்ரீமிங் சேவை தளத்தில் அமேசான் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சியான கிரவுன் சேனல் உட்பட கேமிங் பிரிவில் செலவுக்கு இணையான வருமானத்தை ஈட்ட முடியாதது தான் தற்போதையை முக்கிய பிரச்சனையாக உள்ளது. சமீபத்தில் ட்விச் நிறுவனம் சுமார் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.
New World கேம் அறிமுகம்: சமீபத்தில் அமேசான் New World என்ற பெயரில் புதிய கேம்-ஐ உருவாக்கி மக்களுக்கு அறிமுகம் செய்தது. 2021 செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த கேம் விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்துள்ளது, இந்த நிலையில் தற்போதைய பணிநீக்கம் New World கேம் பிரிவை பாதிக்காது என தெரிகிறது.

இந்திய வர்த்தகம்: அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்தியாவில் அதன் லாஜிஸ்டிக்ஸ் தளத்தை மேம்படுத்தவும், குறிப்பாக உள்நாட்டு டெலிவரி சேவை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என அனைத்தையும் மேம்படுத்த பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. அமேசான் இந்தியாவில் தனது சொந்த விமானச் சரக்கு போக்குவரத்து பிரிவான பிரைம் ஏர் (Prime Air) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே அமேசான் தனது Prime Air சேவையை இயக்கி வருகிறது.
27,000 ஊழியர்கள் பணிநீக்கம்: உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் தளமான அமேசான் வெறும் மூன்றே மாதங்களில் சுமார் 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக ஜனவரி மாதத்தில் 18,000 பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 9,000 பேர் நீக்கப்படுகின்றனர். இந்த அளவுக்கு ஊழியர்கள் நீக்கப்படுவது அமேசான் நிறுவன வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications