ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் போட்டிப்போடும் அமேசான், தனது ஈகாமர்ஸ் வர்த்தகத்தைப் போலவே தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.
ஆம் அமேசான் தனது ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தை உலகளவில் மிகவும் குறுகிய காலகட்டத்திலே விரிவாக்கம் செய்ய மிக முக்கிய வழியாக இருந்தது, உலக நாடுகளில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் வாயிலாக விரிவாக்கம் செய்தது.
இதே பார்மூலாவை தற்போது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மற்றும் மீடியா துறையில் அமேசான் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.
MGM நிறுவனம்
MGM நிறுவனம் என்ற உடன் நீங்கள் சென்னையில் இருக்கும் MGM Dizzee World என நினைத்துவிடாதீர்கள், அமெரிக்காவின் முன்னணி கார்டூடன் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்-ஐ சுமார் 9 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
90ஸ் கிட்ஸ் பேவரைட்
90ஸ் கிட்ஸ்-க்கு மிகவும் பிடித்தமான டாம் அண்ட் ஜெர்ரி, ஜேம்ஸ் பாண்ட், லார்ட் ஆப் ரிங்க்ஸ் எனப் பல பிரபலமான திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் தான் இந்த எம்ஜிஎம். இந்த நிறுவனத்தை அமேசான் ஸ்டூடியோஸ் மற்றும் ப்ரைம் வீடியோ பிரிவின் உயர் தலைவர் மைக் ஹாப்கின்ஸ் தலைமையிலான கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமேசான் - எம்ஜிஎம் நிறுவன பேச்சுவார்த்தை
சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்தப் பேச்சுவார்த்தையில் அமேசான் நிறுவனம் எம்ஜிஎம் நிறுவனத்தைச் சுமார் 7 முதல் 10 பில்லியன் டாலர் வரையிலான தொகைக்குக் கைப்பற்றும் எனக் கணிக்கப்படுகிறது.
அமேசான் ப்ரைம் டிஜிட்டல் சேவை
இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அமேசான் நிறுவனம் MGM நிறுவனத்தின் அனைத்து கார்டூன், திரைப்படங்கள் எனப் பலவற்றையும் பெறுவது மட்டும் அல்லாமல் தனது ப்ரைம் டிஜிட்டல் சேவை தளத்திலும் இதை இணைக்க முடியும்.
20 கோடி வாடிக்கையாளர்கள்
அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது 20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர், அமேசான் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 17.5 கோடி ப்ரைம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் அமேசான் ப்ரைம்-க்கு பெரிய அளவில் உதவியது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஎம் நிறுவனத்திற்குப் போட்டி
எம்ஜிஎம் நிறுவனத்தைக் கைப்பற்ற அமேசான் மட்டும் அல்லாமல் வாய்காம் CBS மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகிறது. ஆனால் அமேசான் நிறுவனத்திற்கு அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications