ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் நிறுவனம், அமெரிக்காவில் தனது 26 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு லாபம் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதுவும் உலகையே இன்று என்ன சேதி என கேட்டு வரும் கொரோனா காலத்தில், பெரும் அளவிலான நிறுவனங்கள், தொழில்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் முடங்கி கிடந்தன.
குறிப்பாக அமெரிக்காவில் தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்ச நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதன் பாதிப்பும் வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் மிக அதிகம்.
வரலாறு காணாத விற்பனை
சொல்லப்போனால் இன்றளவும் கொரோனாவின் கோராத்தாண்டவத்திற்கு அதிகமாக பலிக்கிடாவாக ஆகியிருப்பது அமெரிக்கா தான். ஆனால் இந்த ரணகளத்திலும் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், ஆன்லைன் ஈ-காமர்ஸ் தளமான அமேசான் தனது விற்பனையை வரலாறு காணாத அளவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
அமேசான் பங்கு விலை ஏற்றம்
இந்த அறிவிப்பு வந்த ஒரு மணி நேரத்தில், அமேசானின் பங்கு விலையானது இன்று மட்டும் 5% அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அரசாங்கத்தால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தபோது, சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக விற்பனையும் அதிகரித்துள்ளது.
புதிய பணியமர்த்தல்
இந்த நிலையில் தான் சமீபத்திய மாதங்களில் அமேசான் நிறுவனம் 1,75,000 பேரை வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் தேவை அதிகமாக உள்ள நிலையில், பணியமர்த்தல் இருந்ததாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தான் தற்போது அதன் வருவாய் 40% உயர்ந்து, 88.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
இது ஒரு அசாதாரணமான காலாண்டு
1994ம் ஆண்டு இந்த நிறுவனத்தினை நிறுவிய ஜெஃப் பெசோஸ் ஒரு அறிக்கையில், இது ஒரு அசாதாரணமான மற்றொரு காலாண்டு எனவும் தெரிவித்துள்ளது. அமேசான் தற்போது முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நஷ்டத்தினை சந்திக்க நேரிடும் என்றும் முன்னர் கணித்திருந்தது. ஏனெனில் கொரோனாவிலிருந்து ஊழியர்களை பாதுகாக்க, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கோவிட் 19 தொடர்பான பிற செலவுகளுக்காக 4 பில்லியன் டாலர் செலவிட வேண்டியிருக்கும் என்றும் கணித்துள்ளது.
ஆன்லைன் வணிகத்தினை விரிவுபடுத்துவதற்கான காலம்
இதற்கிடையில் அமேசானின் பங்குகள் இந்த ஆண்டு 60% அதிகமாக உயர்ந்துள்ளன. இது ஜெஃப் பெசோஸிக்கு பெரும் செல்வத்தினையும் சேர்த்துள்ளது. இதே நிபுணர்கள் மத்தியில் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க விரிவடைந்து வருவதால், ஆன்லைன் வணிகம் மேன்மையடைந்து வருகிறது. இது விரிவாக்கம் செய்வதற்கு தகுந்த காலமாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பட்டையை கிளப்பிய விற்பனை
ஆன்லைன் விற்பனையானது அதன் இரண்டாவது காலாண்டில் 48% அதிகரித்து, 45.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தங்களது பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவும், தங்களது தயாரிப்புகளை தளத்தில் இடவும் கிடைத்த நிதியுதவியும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக விற்பனையாளர் சேவை வருவாய் 52%மும், இதே விளம்பரங்கள் போன்ற மற்ற வருவாயும் 41% அதிகரித்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications