கூகுள், மைக்ரோசாப்ட் ஷாக்..! புதிய Web Browser உருவாக்கும் அமேசான்.. சீக்ரெட் கருத்துக்கணிப்பு..!

அமேசான் நிறுவனம் இணைய வர்த்தகத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவும், டிஜிட்டல் சேவை மூலம் வருமானம் ஈட்டவும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் போட்டிப்போட சொந்தமாக வெப் பிரவுசர்-ஐ (Web Browser) உருவாக்குவது குறித்த கருத்துக்கணிப்பை தனது அமேசான் வாடிக்கயாளர்களிடம் ரகசியமாக நடத்தியுள்ளதாக தவகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக வெப் பிரவுசரில் AI பயன்பாடு மிகவும் முக்கியமான இடத்தை அடைந்து வரும் வேளையில் அமேசான் இத்துறைக்குள் வருவது டிஜிட்டல் விளம்பரத்தில் புதிய போட்டியை உருவாக்குவது மட்டும் அல்லாமல் முன்னணி நிறுவனங்களின் கல்லாப்பெட்டியில் பெரிய ஓட்டை போட வாய்ப்பு உள்ளது.

இதேபோல் Web Browser என்பது SpaceX-க்கு எதிராக ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் ராகெட் விடுவது போல் அல்ல, எளிதானது தான் ஆனால் மக்களை ஈர்ப்பதில் சில சவால்கள் இருந்தாலும் அமேசான்.காம் நெட்வொர்க் மூலம் இதை ஈசியாக சமாளித்துவிட முடியும்.

 சீக்ரெட் சர்வே!

சீக்ரெட் சர்வே!

அமேசான் உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் மட்டும் அல்லாமல் மிகப்பெரிய கிளவுட் மற்றும் டெக் சேவை நிறுவனமாகும். சமீபத்தில் சொந்தமாக உருவாக்கப்படும் Browser குறித்து கருத்துக்கணிப்பை நடத்தி வருவதால், இந்நேரம் அதற்கான முயற்சியிலும், நிறுவனம் வேலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

 ஈ-மெயிலில் நடத்தப்பட்ட சர்வே!

ஈ-மெயிலில் நடத்தப்பட்ட சர்வே!

நிக்கோலஸ் டி லியோனின் சமீபத்தில் பதிவிட்ட ட்வீட்டில் இணைய உலாவி பயன்பாடு குறித்து அமேசான் நடத்திய ஆய்வின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டுள்ளார். அதில் கருத்துக்கணிப்பு மின்னஞ்சல் மூலம் நடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் Amazon இன் இந்த கருத்துக்கணிப்பு எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

 கூகுள், மைக்ரோசாப்ட்டுக்கு போட்டி!

கூகுள், மைக்ரோசாப்ட்டுக்கு போட்டி!

ஏற்கனவே Web Browser களில் ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அதன் போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு இணைய உலாவியை அதாவது Web Browser-ஐ அமேசானின் உருவாக்குவதால் அதற்கு போட்டியாக அமையலாம்.

 Survey இல் கேட்கப்பட்ட கேள்விகள்!

Survey இல் கேட்கப்பட்ட கேள்விகள்!

அமேசான் நடத்திய கணக்கெடுப்பில் பயனர்கள் பயன்படுத்தும் device முழுவதையும் பயன்படுத்தும் அனுமதி குறித்தும், browser extensions, privacy and third-party tracking, மற்றும் ஷாப்பிங் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

 பொருளாதார மந்தநிலையை சமாளிக்க புது ஐடியா!

பொருளாதார மந்தநிலையை சமாளிக்க புது ஐடியா!

 

சமீபத்தில் அதிகரித்துவரும் பொருளாதார மந்தநிலை, பணவிக்கம் மற்றும் நிறுவனத்தின் நிகர வருவாயைக் கூட்டுவதற்காக அமேசான் அதன் நிறுவனத்தை பல வழிகளிலும் விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தங்களின் சொந்த Web Browser வைத்துள்ளதைப் போலவே அமேசானும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே அமேசான் அதன் சொந்த வீடியோ மற்றும் மியூச்சு தளங்களிலும் தனது காலை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 Web3 சேவை!

Web3 சேவை!

ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் எட்ஜ் browser க்காக எதிரியம் (ETH) சார்ந்த டிஜிட்டல் வாலட் பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமேசான் சொந்த இணையத்தை உருவாக்குமேயானால் அதில் கிரிப்டோ சார்ந்த இந்த வெப்3 சேவைகளை வழங்குமா என்ற வேள்வியும் தற்சமயம் அதிக மக்களிடையே எழுந்துள்ளது.

 ஊழியர்கள் பணிநீக்கம்!

ஊழியர்கள் பணிநீக்கம்!

சமீபத்தில் பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி, தேவைக்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியதாகக் கூறி அமேசான் நிறுவனம் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக ஜனவரி மாதத்தில் 18,000 பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 9,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+