உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இந்த ஆண்டில் பெருமளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2025 ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமேசான் நிறுவனத்தில் ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்க போகிறது. பல்வேறு பெரிய நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன.

14000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதன் மூலம் அமேசான் நிறுவனம் ஒரு ஆண்டில் 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரை சேமிக்க முடியுமாம். அமேசான் நிறுவனத்தில் வேலை செய்யும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை இதனால் 91,936 ஆக சுருங்கப் போகிறது. இவ்வாறு திடீரென 14,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதால் அமேசான் நிறுவனம் பெரிய அளவில் தங்களுடைய நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்ய இருப்பது தெரிய வருகிறது.
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தங்கள் நிறுவனம் தொழில்நுட்ப உதவியோடு செயல் திறனை மேம்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை மூலம் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுதான் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் ,அமேசான் நிறுவனம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வேலையில் இருந்து நீக்கும் என தகவல் வெளியிட்டது.
இதனிடையே பணிநீக்கம் மட்டுமில்லாமல், அமேசான் நிறுவனம் மூத்த நிலை ஊழியர்களை பணிக்கு எடுப்பதை குறைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கான சம்பள கட்டமைப்புகளையும் மாற்றி அமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் அமேசான் நிறுவனம் கணிசமான அளவு ஊழியர்களை புதிதாக வேலைக்கு எடுத்தது. அதாவது 2019 ஆம் ஆண்டில் அமேசானில் பணிபுரிந்த ஊழியர்களின் எண்ணிக்கை 7,98,000 ஆக இருந்தது 2021 ஆம் ஆண்டில் இது 16 லட்சம் ஆக அதிகரித்தது.
ஆனால் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு அமேசான் நிறுவனம் படிப்படியாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் இருக்கிறது. 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 27,000 பேரை அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications