மீண்டும் சீனா மீது பாயும் அமெரிக்கா.. விமான சேவைக்கும் கட்டுப்பாடுகள் வரப்போகிறதா.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு புறம் கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்காவால் மீண்டும் வீழ்ச்சி காணுமோ என்ற பதற்றம் நிலவி வருகிறது.

 

சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், இன்றும் உலகம் முழுக்க தனது ஆதிக்கத்தினை செலுத்தி வருகிறது.

எனினும் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா தான். இதுவே அமெரிக்காவின் கோபத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது எனலாம்.

சீனா மீது குற்றச்சாட்டு

சீனா மீது குற்றச்சாட்டு

ஒரு புறம் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை. சரிந்து வரும் பொருளாதாரம், மக்களை வாட்டி வதைத்து வரும் வேலையின்மை, நீட்டித்த லாக்டவுன் என அடுத்தடுத்து, கொரோனாவால் அமெரிக்க மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் அமெரிக்கா சீனாவின் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

விமான சேவை சாத்தியமில்லை

விமான சேவை சாத்தியமில்லை

இதனால் சீனா பொருட்களுக்கு வரியினை அதிகரிப்பதாகவும், சீனா நிறுவனங்களை பங்கு சந்தையில் வர்த்தகத்தினை தடை செய்தல், இப்படி அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகிறது சீனா. இதற்கிடையில் தற்போது அமெரிக்கா - சீனா இடையே விமான சேவையினை தொடங்குவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. .

கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை
 

கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை

அதாவது அமெரிக்கா விமான நிறுவனங்கள் சீனாவுக்கு மீண்டும் சேவையைத் தொடங்குவது சாத்தியமற்றதாக சீனா உருவாக்குகிறது என்றும் அமரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டும் அல்ல, நான்கு சீன விமான நிறுவனங்களுக்கு விமான சேவைகளுக்கான கால அட்டவணையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுக்கிறது. இதற்கிடையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நிர்வாகம் சீன விமான நிறுவனங்களின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனால் சீனா விமான நிறுவனங்களுடனான ஓரு ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறிவிட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கு விமானத்தினை இயக்க விருப்பம்

சீனாவுக்கு விமானத்தினை இயக்க விருப்பம்

எனினும் அமெரிக்காவின் அரசாங்க இணையதளத்தில் வெளியான ஒரு உத்தரவில், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவை ஜூன் மாதத்தில் சீனாவுக்கு மீண்டும் விமானங்களைத் தொடங்க விரும்புகின்றன என்றும் வெளியிட்டுள்ளதாக நியூஸ் 18 செய்திகள் கூறியுள்ளது.

விரைவில் கட்டுப்பாடுகள் வரலாம்

விரைவில் கட்டுப்பாடுகள் வரலாம்

ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ஸ் ஏர்லைன்ஸ் கார்ப், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் கோ, ஹைனன் ஏற்லைன்ஸ் ஹோல்டிங் கோ மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் மே27க்குள் அவற்றின் கால அட்டவணையையும், மற்ற விவரங்களையும் தாக்கல் செய்யுமாறும் அமெரிக்கா அதன் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் சீனா விமான நிறுவனங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை?

என்ன செய்ய போகிறதோ தெரியவில்லை?

முன்னதாக கடந்த வாரத்தில் 33 சீன நிறுவனங்களை மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்பட்ட பொருளாதார தடுப்புப் பட்டியலில் சேர்த்தது. இது பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அமெரிக்கா தேசிய பாதுகாப்பு கவலைகளையும் நிவர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது விமான சேவையினை தற்போது கையில் எடுத்துள்ளது அமெரிக்கா, இதற்கும் இனி என்னவெல்லாம் கட்டுப்பாடுகளை விதிக்க போகிறதோ தெரியவில்லை.

சர்வதேச பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள்

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சீனாவின் பங்கு சந்தையிலும் அது எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் விமான நிறுவன பங்குகளும் சரி, சீனாவின் விமான நிறுவன பங்குகளும் சரிவினை சந்தித்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை காரணமாக மீண்டும் விமான துறை பங்குகள் வீழ்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America and china in edging new type of problem

US government said impossible for US airlines to resume service to china, also its ordered four Chinese air carriers to file flight schedules with the U.S. government.
Story first published: Tuesday, May 26, 2020, 10:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X