கல்வி சார்ந்த சேவைகளை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வழங்கி வரக்கூடிய அமெரிக்காவை சேர்ந்த செக் (Chegg) என்ற நிறுவனம் தன்னுடைய ஊழியர்களில் 22 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் 248 பேர் தங்களுடைய வேலையை இழக்க உள்ளனர்.
செக் நிறுவனம் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக கூறியிருக்கிறது. திங்கட்கிழமை அன்று இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்கள் நிறுவனம் செலவினங்களை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக நிறுவன ஊழியர்களில் 22 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முதல் கட்டமாக தங்களின் அமெரிக்க மற்றும் கனடாவில் செயல்பட்டு வரக்கூடிய அலுவலகங்களை மூடப் போவதாக செக் நிறுவனம் கூறியிருக்கிறது. மேலும் தேவையற்ற செலவுகளை கண்டறிந்து குறைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தையில் செக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 சதவீதம் உயர்ந்தது. இந்த சிக்கன நடவடிக்கைகளின் மூலம் 2025 ஆம் ஆண்டு செக் நிறுவனம் 55 மில்லியன் டாலர்கள் வரை சேமிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு இது 100 மில்லியன் ஆக உயரும் என சொல்லப்படுகிறது.
திங்கட்கிழமை அன்று தான் செக் நிறுவனம் தன்னுடைய முதல் காலாண்டு முடிவு நிதி முடிவுகளை வெளியிட்டது. அதில் அந்த நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 30 சதவீதம் குறைந்து 121 மில்லியன் டாலர்களாக இருப்பது தெரியவந்திருக்கிறது. செக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தங்களுடைய நிறுவனம் செலவுகளை குறைத்து விட்டு வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்தி மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தற்போதைக்கு திட்டமிட்ட சில ப்ராஜெக்ட்களை நிறுத்தி வைத்திருப்பதாக கூறும் அவர் நிறுவன செயல்பாடுகளையும் தங்களுடைய தொழில் நடத்தும் முறையும் மாற்றி அமைக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
இரண்டாவது காலாண்டில் செக் நிறுவனத்தின் நிகர வருமானம் 100 மில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் செக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 57 சதவீதமும் கடந்த 12 மாதங்களில் 84 சதவீதமும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் தான் அதிகளவில் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தற்போது education technology நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications