அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் உலகத்தை ஆட்டிப்படைத்து விட்டது என்று தான் கூற வேண்டும். அந்தளவுக்கு அமெரிக்கா சீனா மட்டும் அல்ல, மற்ற உலக நாடுகளையும் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி காண வழி வகுத்தது.
ஏன் உலக வங்கியே இதனால் உலக பொருளாதாரமே வீழ்ச்சி கண்டு வருகிறது. ஆக உங்களது குடுமிப்பிடி சந்தையை நிறுத்துங்கள் என்று கதறியது. ஆனால் அப்போதெல்லாம் முடிவுக்கு வராத இந்த வர்த்தக போர், தற்போது முடிவுக்கு வர உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. திங்கட்கிழமையன்றே இதற்கான இறுதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சீனாவின் வர்த்தக ஆலோசகர் பீட்டார் நவரோ கூறியுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸில் வெளியான அறிக்கையின் படி, அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்புக்கும், சீனாவுக்கும் இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருப்பதாகவும், எந்த அழுத்தத்தையும் எதிர்க்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு உதாரணம் டிசம்பர் 15 அன்று அமலுக்கு வரவிருந்த வரி விகித உயர்வானது கொண்டு வரப்படவில்லை. இதுவே இந்த இரு நாடுகளுக்கும் சுமூகமான தீர்ப்பை கொண்டு வந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் வரி அதிகரிப்பை நிறுத்தி வைத்ததோடு, தற்போது அமலில் உள்ள சில வரிகளையும் குறைத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் விவசாய பொருட்களின் கொள்முதலை சீனா ஏற்றுக் கொண்டது. மேலும் அறிவுசார் சொத்து பாதுகாப்பு, அமெரிக்க நிறுவனங்களின் கட்டாய தொழில்நுட்ப பரிமாற்றங்கள், மேலும் புதிய நாணய நடைமுறைகள் என பல சீர்திருத்தங்கள் செய்துள்ளன.
எனினும் இந்த ஒப்பந்தத்தின் இறுதியான துல்லியமான விதிமுறைகள் எதுவும் வெளியாகவில்லை. அமெரிக்கா வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதைசர், 86 பக்க ஒப்பந்தத்தை அவரும், லியுவும் ஜனவரி தொடக்கத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த சமயத்தில் இந்த ஆவணங்கள் பகிரங்கமாக வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ உலகையே ஆட்டிப்படைத்த இந்த வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வர விருப்பது உலக நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தி தான். அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமே. ஏனெனில் எதற்கு எடுத்தாலும் வர்த்தக போர் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், இனி அது முடிவுக்கு வந்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications