அசர வைக்கும் உதவி தொகை..ரூ.150 லட்சம் கோடி கன்பார்ம்.. க்ரீன் சிக்னல் கொடுத்த அமெரிக்க செனட் சபை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இன்று ஒட்டுமொத்த உலகினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவினையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

உலகில் பொருளாதாரத்தில் மட்டும் நாங்கள் முதன்மை அல்ல. மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல விஷயங்களிலும் நாங்கள் தான் பர்ஸ்ட் என மீண்டும் நிரூபித்துள்ளது அமெரிக்கா. ஆக நாங்க எப்பவுமே, எதிலும் பர்ஸ்ட் தான் என நிருபித்துள்ளது.

இன்றைய நிலையில் அமெரிக்காவில் 68,581 பேர் கொரோனா வைரஸினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 1,036 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு
 

மக்கள் எதிர்பார்ப்பு

இப்படி அமெரிக்காவிலும் பரவலாக நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, தாக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உ.லகின் முதன்மை மற்றும் வல்லரசு நாடான அமெரிக்காவில், உதவியும் பெரும் அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமெரிக்கா அதனை நிரூபித்துள்ளது.

செனட் சபை ஒப்புதல்

செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க மக்களுக்கு 2 டிரில்லியன் டாலர் உதவி தொகை கொடுக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மக்களின் நலம் கருதி, அமெரிக்காவின் செனட் சபையும் அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக வரலாற்றிலேயே இப்படி பெரிய அளவிலான தொகை உதவித் தொகையாக கொடுக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது அந்த நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உதவித் தொகை

உதவித் தொகை

இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 150 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான பாதிப்புகளை சரி செய்வதற்கு இந்த உதவித் தொகை பெரிதும் உதவலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் நல்ல விஷயம் என்னவெனில் அமெரிக்காவின் செனட் சபையில் இந்த 880 பக்கம் கொண்ட மசோதாவை ஒரு மனதாக அனைவரும் 96 - 0 என்ற கணக்கில் வாக்களித்து ஏற்றுக் கொண்டுள்ளார்களாம்

நிதி எதற்கெல்லாம் உதவும்?
 

நிதி எதற்கெல்லாம் உதவும்?

இது கொரோனாவில் போராடும் ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கு, தொழில்களுக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை கடன் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேலையின்மையை குறைக்க இது வழிவகுக்கும். மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வரும் அமெரிக்க குடிமக்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக கணிசமான தொகை செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

நிச்சயம் கையெழுத்திடுவேன்

நிச்சயம் கையெழுத்திடுவேன்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துகளை கூறியுள்ள டொனால்டு டிரம்ப், கடந்த புதன் கிழமையன்றே இந்த சட்டத்தை தனது மேசைக்கு வந்தால் நிச்சயம் நான் கையெழுத்திடுவேன் என்றும் கூறியிருந்தார். மேலும் வாழ்த்துகள் அமெரிக்கா என்றும் தனது பதிவில் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே இன்று அமெரிக்க செனட் இன்று இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

யாருக்கு எவ்வளவு?

யாருக்கு எவ்வளவு?

இந்த உதவித் தொகையில் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்படலாம் என்ற சில வெளியாகியுள்ளன. அதில் 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொகை, அமெரிக்கர்களின் வங்கி கணக்கின் கீழ் நேரடியாக ஒவ்வொருவருக்கும் 1200 டாலர்கள் வரை செலுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 90,000 ரூபாயாகும். இதில் குழந்தைகளூக்கு 500 டாலர் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்கள்

நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்கள்

மேலும் அமெரிக்காவின் கரூவூலத்துறையானது அமெரிக்கா நிறுவனங்கள் மற்றும் விமான துறை நிறுவனங்கள், மற்றும் பொதுத்துறைக்கு 500 பில்லியன் டாலர் வரை செலுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதே சிறு வணிகங்களுக்கு 350 பில்லியன் டாலர் வரை கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஊக்கத் தொகை

ஊக்கத் தொகை

இதே மருத்துவமனைகள, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் என கொரோனாவினை எதிர்த்து போராடி வருபவர்களுக்கு 100 பில்லியன் டாலர்.

மாநில மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு 150 பில்லியன் டாலர்

அமெரிக்க குடிமகன்களின் இழப்புகளை ஈடுகட்ட அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஒவ்வொருவரும் 1,200 வரையிலும், குழந்தைகளுக்கு 500 டாலர்கள வரையிலும் செலுத்தப்படும்.

வேலையின்மையால் தவிப்பவர்களுக்கு போதிய உதவித் தொகையும் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America senate passes Rs.150 lakh crore coronavirus relief package

US senate passes $2 trillion coronavirus relief packages. The bill also expected $300bn in direct payments to most Americans of up to $1,200 (Rs. 90,000) per adult and $500 per child within about three weeks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X