சீனாவுக்கு செக் வைத்து நெருக்கும் அமெரிக்கா! மீண்டும் அமெரிக்காவின் சீன இறக்குமதிகளில் சிக்கல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பஞ்சாயத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 2018-ம் ஆண்டு வெறுமனே வர்த்தகப் போராகத் தொடங்கிய பிரச்சனை, கொரோனா வைரஸ் வரை இன்று எல்லா பக்கமும் பரவிக் கொண்டு இருக்கிறது.

அமெரிக்கா, சீனாவின் ஹாங்காங் தன்னாட்சி விவகாரம் தொடங்கி, சின் ஜியாங் (Xinjiang) உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனை வரை பல்வேறு விவகாரங்களையும், அதில் சீனா நடந்து கொள்ளும் விதத்தையும், சர்வதேச அரங்கில் விமர்சித்துக் கொண்டே வருகிறது.

பிரச்சனையும் வளர்ந்து கொண்டே போகிறது. இப்போது சின் ஜியாங் (Xinjiang) உய்கர் இஸ்லாமியர்கள் தொடர்பான ஒரு விவகாரத்தை வைத்து தான், சீனாவின் சின் ஜியாங் (Xinjiang) பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் சில பொருட்களுக்கு தடை விதித்து இருக்கிறது அமெரிக்கா.

பின்னோக்கிச் செல்வோம்.
 

பின்னோக்கிச் செல்வோம்.

அமெரிக்கா விதித்து இருக்கும், இறக்குமதி தடையைப் பார்ப்பதற்கு முன், உய்ர்கர் இஸ்லாமியர்களைப் பற்றியும், சின் ஜியாங் (Xinjiang) பகுதியைப் பற்றியும் முதலில் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். அதன் பின் ஏன் அமெரிக்க, குறிப்பிட்டு சின் ஜியாங் (Xinjiang) பகுதியில் இருந்து வரும் பொருட்களுக்கு தடை விதித்து இருக்கிறது, என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் அமெரிக்காவில் நுழையத் தடை என எல்லாம் பார்ப்போம்.

உய்கர் முஸ்லீம்கள்

உய்கர் முஸ்லீம்கள்

சமீபமாக செய்தித் தாள்களில் அதிகம் பேசப்படும் மக்கள் இவர்கள். சின் ஜியாங் (Xinjiang) என்கிற பகுதியில் தான் இந்த உய்கர் இஸ்மாலிமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 1949-ம் ஆண்டு சீனா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட போது, உய்கர் இஸ்லாமியர்கள் வாழும் சின் ஜியாங் (Xinjiang) பகுதியும், சீனாவின் ஒரு பகுதி தான். ஆனால் திபெத்தைப் போல தன்னாட்சி அதிகாரம் கொண்டது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்த சின் ஜியாங் (Xinjiang) பகுதியில், மெல்ல சீன அரசு, உய்கர் முஸ்லிம்களின் மத, வணிக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தொடங்குகியது. 1990-களில் சின் ஜியாங்கில், சீனாவுக்கு எதிராக கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. கலவரங்களை அடக்க, சீனாவும் தன் அடக்குமுறைகளைக் காட்டத் தொடங்கியது. பிரச்சனை மெல்ல பெரிதானது.

ஒரு காலத்தில் பெரும்பான்மையினர்கள் இன்று சிறுபான்மையினர்கள்
 

ஒரு காலத்தில் பெரும்பான்மையினர்கள் இன்று சிறுபான்மையினர்கள்

ஆரம்ப காலத்தில், சிங் ஜியாங் பகுதியில் உய்கர் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையினராக இருந்தார்கள். ஆனால் கடந்த பல தசாப்தங்களில், மெல்ல ஹான் இனத்தவர்கள் நிறைய சின் ஜியாங் பகுதியில் குடியேறி இருக்கிறார்கள். எனவே, இன்று உய்கர் முஸ்லீம்கள் சின் ஜியாங் பகுதியில் மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். இப்போது உய்கர் முஸ்லிம்கள் மீது, தீவிரவாத அச்சுறுத்தல் என்கிற விஷயத்தைச் சொல்லி, சீனா, சின் ஜியாங் பகுதியில் செய்யும் அடக்குமுறையை நியாயப்படுத்த முயல்வதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்க கையில் எடுத்த உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனை

அமெரிக்க கையில் எடுத்த உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனை

இந்த 2020-ம் ஆண்டில் தான், அமெரிக்கா, இந்த உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனையை, சீனாவுக்கு எதிராக கையில் எடுத்தது. Uyghur Human Rights Policy Act of 2020-ஐக் கொண்டு வந்து இருக்கிறது அமெரிக்கா. இந்த சட்டத்தை கடந்த 17 ஜூன் 2020 அன்று தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் கொடுத்து சட்டமாக்கினார். இந்த சட்டத்தின் வழியாக, உய்கர் இன மக்கள், சீனாவின் சின் ஜியாங் பகுதியில் நடத்தப்படுவதைக் குறித்தும், சின் ஜியாங்கில் இருக்கும் மறு கல்வி கேம்புகளைக் குறித்தும் பேச பல நாடுகளுக்கும் வழிவகுக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான், சின் ஜியாங் பகுதியில் இருந்து வரும் சில சீன கம்பெனி பொருட்களுக்கு அமெரிக்கா, அனுமதி மறுத்து இருக்கிறது.

சீனாவுக்கு அமெரிக்காவின் செக்

சீனாவுக்கு அமெரிக்காவின் செக்

"Withhold Release Orders" என்கிற தடை உத்தரவை கடந்த 14 செப்டம்பர் 2020 திங்கட்கிழமை அன்று வெளியிட்டது அமெரிக்கா. இந்த தடை உத்தரவால், சில சீன கம்பெனிகள், சீனாவின் சின் ஜியாங் பகுதியில் உற்பத்தி செய்யும் பருத்தி, கம்ப்யூட்டர் பாகங்கள், கூந்தல் சம்பந்தப்பட்ட பொருட்கள் (Hair Products) மற்றும் ஆடைகள் போன்றவைகள், அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதியை மறுக்கிறது.

இவைகளுக்கும் தடை

இவைகளுக்கும் தடை

அதோடு, சிங் ஜியாங் பகுதியில் இருக்கும் சில மறு கல்வி கேம்ப்கள், லாப் கவுண்டியில் இருக்கும் 4-வது Vocational Skills Education and Training Center போன்ற இடங்களில் உற்பத்தி செய்யப்படும் எல்லா பொருட்களுக்குமே, மேலே சொன்ன "Withhold Release Orders"-ன் கீழ் தடை உண்டாம்.

ஏன் இந்த தடை

ஏன் இந்த தடை

சின் ஜியாங் பகுதிகளில், சுமாராக 10 லட்சம் உய்கர் முஸ்லீம்கள், internment camp-களில் அடைக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கேம்ப்களில், மார்க்சியம் படிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்களாம். அதோடு தங்களின் மதத்தையும் கைவிட கட்டாயப்படுத்தப் படுகிறார்களாம். ஆலைகளில் கட்டாயப்படுத்தி வேலை வாங்குகிறார்கள் என மனித உரிமை குழுக்கள் சொல்கின்றன. எனவே தான் இந்த தடை என்கிறது அமெரிக்க தரப்பு.

சீனா என்ன செய்ய வேண்டும்

சீனா என்ன செய்ய வேண்டும்

கம்யுனிஸ நாடான சீனா, தன்னுடைய இந்த கேம்ப்களை மூட வேண்டும். அதோடு இந்த கேம்ப்களில் இருப்பவர்களை சுதந்திரமாக வெளியே விட வேண்டும். அரசு நடத்தும் இந்த forced labor program-களை நிறுத்த வேண்டும் என, அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறையைச் (DHS) சேர்ந்த அதிகாரி (Ken Cuccinelli) கென் குசினெல்லி சொல்லி இருக்கிறார். அதுவரை சீன பொருட்கள் மீதான தடை நீடிக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்.

சீன தரப்பில் இருந்து கடுமையான பதில்

சீன தரப்பில் இருந்து கடுமையான பதில்

சின் ஜியாங் பகுதியில் இருக்கும் பிரச்சனை மனித உரிமைகள் தொடர்பானதோ, ஒரு இனம் சம்பந்தப்பட்டதோ, மதம் சம்பந்தப்பட்டதோ அல்ல. அது தீவிரவாதத்துக்கும், பிரிவினைவாதத்துக்கும் எதிரான பிரச்சனை. இதை உண்மைகளோடும், தரவுகளோடும் சீனா உலகுக்கு காட்டி இருக்கிறது என சீனாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சாவ் லீஜின் (Zhao Lijian) சொல்லி இருக்கிறார்.

முரட்டு பதிலடி

முரட்டு பதிலடி

அமெரிக்காவுக்கு உண்மையாகவே மனித உரிமைகள் பற்றி எல்லாம் அக்கறை இல்லை. அமெரிக்கா, மனித உரிமைகளை ஒரு கேடயமாகக் கொண்டு, சீன கம்பெனிகளை ஒடுக்குகிறது. சின் ஜியாங் பகுதியில் இருக்கும் நிலைத் தன்மையை சீர்குலைக்கப் பார்க்கிறது. சீனாவின் சின் ஜியாங் கொள்கைகளைப் பற்றி அவதூற செய்கிறது என காட்டமாக பதிலடி கொடுத்து இருக்கிறார் சாவ் லீஜின் (Zhao Lijian).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America will block certain products from Xinjiang of China

The US had announced a withhold release orders in last monday, which blocks certain products from Xinjiang of China.
Story first published: Thursday, September 17, 2020, 14:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X