அமெரிக்காவில் CEO ஆகவேண்டுமெனில் நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும்..அமெரிக்க தூதர் டிரெண்டிங் ஜோக்!

அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களைப் பற்றி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி புகழந்து பாராட்டினார்.

ஒரு காலத்தில் இந்தியராக இருந்தால் அமெரிக்காவில் சிஇஓவாக ஆக முடியாது என்ற நிலை மாறிப்போய் இப்போது நீங்கள் இந்தியராக இல்லாவிட்டால் அமெரிக்காவில் சிஇஓ-வாக ஆக முடியாது என்ற நிலை வந்துவிட்டது என்று நகைச்சுவையுடன் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் CEO ஆகவேண்டுமெனில் நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும்..அமெரிக்க தூதர் டிரெண்டிங் ஜோக்!

கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ் என்று பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்தியர்கள் தான் சிஇஓக்களாக இருக்கின்றனர்.

இதுபற்றி எரிக் கார்செட்டி மேலும் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள பார்ச்சூயூன் 500 நிறுவனங்களில் பத்தில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் சிஇஓ-வாக உள்ளார். இவர்கள் அமெரிக்காவில் படித்து அங்கு குடியேறிய இந்தியர்கள் ஆவர்.

அமெரிக்கா ஒரு பாதுகாப்பான நாடாகும். இந்திய மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகிறது. அமெரிக்காவில் வாழும் இந்தியக் குழந்தைகளை தங்களது குழந்தைகளாகவே கருதுகிறது. இந்திய மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை காட்டுகிறோம்.

அவர்கள் படிப்பதற்கு தேவையான பொருளுதவிகளையும் தருகிறோம். இந்தியர்களின் மனநலத்தையும், அவர்களது குடும்பத்தின் பாதுகாப்பையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

அமெரிக்காவில் ஒருகாலத்தில் டாட் பஸ்டர்கள் என்ற அமைப்பினர் இந்தியர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தினர். டாட் என்பது இந்தியப் பெண்கள் வைக்கும் குங்குமப் பொட்டு ஆகும். அதேபோல் சீக்கியர்களையும் அவர்கள் குறிவைத்து தாக்கினர். டர்பன்கள் அணிந்து செல்லும் சீக்கியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இதனால் அமெரிக்காவில் இந்தியர்கள் வசிப்பதற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க போலீஸார் எடுத்த கடும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த குற்றங்களும் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் குறையத் தொடங்கின. இப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதேயில்லை.

இந்தியாவை சேர்ந்த வம்சாவளியினர் வேலை, தொழில்களில் மட்டுமல்லாமல் அந்நாட்டு அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கி விட்டனர். அமெரிக்க துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். இதுமட்டுமல்லாமல் அமெரிக்க நீதித்துறையிலும் நிறைய இந்தியர்கள் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்தியர்கள் சிறப்பாக கல்வி பயின்று நல்ல வேலைகளை அங்கு பெறுகின்றனர்.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+