30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு.. பெட்ரோல் விலை குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு வர்த்தக முரண்பாடுகளை மேற்கொண்டு வருவதால் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வரும் பிரச்சனை காரணமாக, அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்ந்து செய்ய வேண்டுமெனில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று கூறியது.

 

இந்த நிலையில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் அதிகளவில் ஈரானிடமிருந்தே எண்ணெய் இறக்குமதி செய்து வந்தன. இந்த நிலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக ஏறும் என்றும் கருதப்பட்டது.

 
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு.. பெட்ரோல் விலை குறையுமா?

எனினும் இந்த மோசாமான நிலையை தடுக்க சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் கூறினாலும், இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்ற நிலையில் அமெரிக்காவும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியது.

அடிச்சாலும் புடிச்சாலும் அமெரிக்காதான்.. கறாராக நிற்கும் இந்திய ஐ.டி ஊழியர்கள்.. அதிகரிக்கும் மோகம் அடிச்சாலும் புடிச்சாலும் அமெரிக்காதான்.. கறாராக நிற்கும் இந்திய ஐ.டி ஊழியர்கள்.. அதிகரிக்கும் மோகம்

அதன் விளைவு தற்போது 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பு அதிகரித்துள்ளதாம். அதே சமயம் நாட்டில் நிலவி வரும் வர்த்தக பிரச்சனைகளால் தேவை எந்த அளவுக்கு இருக்கும் என்றும் பயம் நிலவி வருவதாகவும் கருதப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தற்போது அது 52.17 (Crude Oil WTI Futures) டாலராக வர்த்தகமாகியும் வருகிறது.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்த அமெரிக்கா வெளியிட்டுள்ள இருப்பில், கடந்த வாரம் 22 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளதாம். இது கடந்த 1990ல் இருந்ததை போல் உற்பத்தி அதிகரித்துள்ளதாம்.

அதோடு அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையாலும், மெக்சிகோ பிரச்சனையும் சேர்ந்து உலக பொருளாதாரத்தையே பதம் பார்க்க தொடங்கி விட்டன. இந்த நிலையில் ஒபெக் அமைப்பு உற்பத்தியை ஜீன் வரை அனுமதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

எனினும் இது குறித்து ஒபெக் அமைப்பின் பொதுச் செயலாளர் முகமது பர்கிண்டோ கூறுகையில், நடப்பில் உள்ள பொருளாதார நிலைமை கணக்கில் வைத்துக் கொண்டு தான், அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யப்படும், இதன் பிறகே உற்பத்தியை இப்படியே அதிகரிக்கலாமா? இல்லை குறைத்து விடலாமா? என்று முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

American oil storage increased most in 30 years

America crude and fuel inventories increased in almost 30 years, also feeding fears of a glut as trade disputes threaten demand.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X