வாஷிங்டன், அமெரிக்கா: உலக அளவில் பெரிய அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவில் இருக்கின்றன. இந்த தொழில்நுட்ப நிறுவனங்களையெல்லாம் தலைமையேற்று நடத்தக்கூடிய நபர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள்.
உலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக் கூடிய சுந்தர் பிச்சை இந்தியாவை சேர்ந்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்திய நாதெல்லா இந்தியாவை சேர்ந்தவர் . ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தி வரக்கூடிய பெர்பிளெக்சிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியாவை சேர்ந்தவர்.

உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்பிலிருக்கக்கூடிய இந்தியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்த பட்டியலில் தற்போது புதிதாக இரண்டு பேர் இணைந்து இருக்கிறார்கள். உலகின் முன்னனி டெலிகாம் சேவை நிறுவனமான டி-மொபைல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனி கோபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது டி மொபைல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் மைக் ஸீவர்ட் பதவி காலம் நவம்பர் 1ஆம் தேதியோடு முடியக்கூடிய நிலையில் ஸ்ரீனி கோபாலனை தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்துள்ளனர். எனக்கு அடுத்து தலைமை செயல் அதிகாரி பொறுப்பு கோபாலனுக்கு தான் செல்லும் என்பதை இயற்கையான ஒரு தேர்வு எனக் கூறியிருக்கும் மைக் ஸீவர்ட் நிறுவன வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் கோபாலன் என்றும் அவர் நிறுவனத்தை தலைமை ஏற்று அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
தற்போது கோபாலன் டி மைபல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார். வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்தும் ஏஐ தொழில்நுட்பத்திலும் நிறுவன வளர்ச்சியை மேம்படுத்துவேன் என கோபாலன் அறிவித்து இருக்கிறார்.
ஸ்ரீனி கோபாலனை பொறுத்தவரை டெலிகாம், டெக்னாலஜி மற்றும் ஃபைனான்சியல் சர்வீஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் 30 ஆண்டுகாலம் அனுபவம் கொண்டவர். யுனிலிவர் இந்தியா, அசெஞ்சர் ஆகிய நிறுவனங்களில் முதலில் வேலையை தொடங்கியவர் தான் கோபாலன். இந்தியாவில் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஜெர்மனியின் Deutsche Telekom நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிறுவனம் தான் அமெரிக்காவில் டி மொபைல் என அழைக்கப்படுகிறது.ஸ்ரீனி கோபாலன் டெல்லி பப்ளிக் ஸ்கூலில் பள்ளி படிப்பை முடித்தவர். ஐஐஎம் அகமதாபாத்தில் 1992 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார்.

மற்றொரு இந்தியரும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த Molson Coors என்ற மதுபான நிறுவனத்தின் தலைமை செய்த அதிகாரி பொறுப்பு இந்தியாவை சேர்ந்த ராகுல் கோயிலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பீர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி இந்த ஆண்டு இறுதியுடன் பணி ஓய்வு பெறுவதால் ஏற்கனவே இந்த நிறுவனத்தில் வேலை செய்து வரக்கூடிய கோயலுக்கு தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு தந்திருக்கின்றனர்.
வரும் 1ஆம் தேதி முதல் இவர் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிக்க இருக்கிறார். கோயல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் இந்த நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார் . படிப்படியாக உயர்ந்து தற்போது தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பு ஏற்கிறார். அமெரிக்கர்கள் மத்தியில் பீர் அருந்தும் பழக்கம் குறைவது அமெரிக்கா வெளிநாடுகள் உடனான வர்த்தக மோதல்கள் என சவாலான சூழலில் இவர் தலைமை பொறுப்பை ஏற்கிறார்.ஹெச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில் இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
More From GoodReturns

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications