ரஷ்யா 10 வருடத்திற்குள் மோசமான நிலையை எட்ட போகிறது.. புதின் அரசுக்கு முற்றுப்புள்ளியா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையானது 11 மாதங்களாகவே தொடர்ந்து நீடித்து வருகின்றது. இன்று வரையில் பலகட்ட பேச்சு வார்த்தையானது நடந்து வந்தாலும், இது குறித்து சுமூக தீர்வு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டிய நிலையில், நேட்டோ படையில் இணைய கூடாது என ரஷ்யா வாதிட்டது.

இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் 11 மாதங்களாகவே இந்த பிரச்சனையானது தொடர்ந்து கொண்டுள்ளது.

ரஷ்யா அஸ்திவாரத்தையே ஆட்டி பார்க்கும் G7 நாடுகள்.. பிரச்சனை என்ன தெரியுமா..?ரஷ்யா அஸ்திவாரத்தையே ஆட்டி பார்க்கும் G7 நாடுகள்.. பிரச்சனை என்ன தெரியுமா..?

மேற்கத்திய நாடுகள் தடை

மேற்கத்திய நாடுகள் தடை

இப்பிரச்சனை காரணமாக இரு நாட்டு வீரர்கள் பல ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என்பதோடு, உக்ரைனை சேர்ந்த அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் தங்களது சொந்த வீட்டினை இழந்து, நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்க, மேற்கத்திய நாடுகள் பலவும் பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

அட்லாண்டிக் ஆய்வறிக்கை

அட்லாண்டிக் ஆய்வறிக்கை

மேற்கத்திய நாடுகளின் தடையால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் தற்போது பெரியளவில் தாக்கம் என்பது இல்லை என்றாலும் , நீண்டகால நோக்கில் தாக்கம் இருக்கலாம் என அட்லாண்டிக் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் தடையால் ரஷ்யா பொருளாதாரத்தில் தோல்வியுற்ற ஒரு நாடாக மாறும். இது 2033-க்குள் மோசமான சரிவினைக் காணலாம் என தெரிவித்துள்ளது.

 கருத்து கணிப்பு என்ன?

கருத்து கணிப்பு என்ன?

இந்த கருத்துக்கணிப்பானது 10 ஆண்டுகளில் உலகம் எப்படியிருக்கும் என 167 நிபுணர்களிடம் நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் 46% பேர் 2033க்குள் ரஷ்யா மோசமான தாக்கத்தினை எதிர்கொள்ளும் என்றும், 21% பேர் அழிகரமான நாடாக மாறும் கருதுகின்றனர்.

ரஷ்யா அவ்வளவு தான்?

ரஷ்யா அவ்வளவு தான்?

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் இந்த பிரச்சனைக்கு மத்தியில், இது மிகப்பெரிய அணு ஆயுதங்கள் இப்போரில் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இந்த ஆய்வில் மற்றொரு வியக்க வைக்கும் கருத்து என்னவெனில் ரஷ்யா 2023க்குள் போர் புரட்சி, உள்நாட்டு போர் என சில காரணிகளுக்கு மத்தியில் 21% பேர் ரஷ்யா வீழ்ச்சி காணலாம் என கூறியுள்ளனர்.

ரெசசன்

ரெசசன்

அடுத்த தசாப்தத்தில் ரஷ்யா சரிவினைக் சந்திக்கலாம் என இந்த ஆய்வில் கலந்து கொண்ட பலரும் கூறிய கருத்தாக உள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு மத்தியில் பொருளாதார தடைகளால் விதிக்கப்பட தொடங்கிய நிலையில், எட்டு மாதங்களுக்கு பிறகு ரெசசனுக்குள் ரஷ்யா நுழைந்துள்ளது.

 ஏழ்மைக்கு தள்ளியுள்ளது

ஏழ்மைக்கு தள்ளியுள்ளது

ரஷ்யா எண்ணெய் மீதான தடை, எண்ணெய் விலை உச்ச வரம்பு என பல காரணிகளுக்கு மத்தியில், ரஷ்யாவின் வருவாய் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. ரஷ்யாவினை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகளின் இந்த திட்டமானது பேரழிவை ஏற்படுத்த கூடும். விளாடிமிர் புதினின் இந்த போர் நடவடிக்கையானது, நாட்டை ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டதாகவும் மாற்றியுள்ளது.

பொருளாதாரம் என்னவாகுமோ?

பொருளாதாரம் என்னவாகுமோ?

மொத்தத்தில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது, ரஷ்யாவின் பொருளாதாரத்தை மட்டும் அல்ல, சர்வதேச பொருளாதாரத்தினையும் பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு எப்போது இந்த போர் முடிவுக்கு வருமோ? இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: russia ரஷ்யா
English summary

Amid the Russia Ukraine crisis, the economy will collapse within 10 years

Amid the Russia Ukraine crisis, the economy will collapse within 10 years
Story first published: Tuesday, January 10, 2023, 21:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X