வாஷிங்டன்: கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம் அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடியது தான்.
கொரோனாவுக்காக பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மருந்து தான் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.
இந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டது.
இந்தியா தடை
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசு அத்தியாவசியமான 24 மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை செய்திருந்தது. ஆனால் அமெரிக்கா ஜானதிபதி தங்களுக்கு உதவுமாறு மோடியை தொடர்பு கொண்டதாகவும், பின் மிரட்டலுடன் கட்டாயம் உதவி செய்யாவிடில் பின் விளைகளை சந்திக்க நேரிடும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.
அமெரிக்காவுக்கு உதவி
இந்த நிலையில் 12 மருந்து பொருட்களின் தடையும் நீக்கப்பட்டது. இதற்கிடையில் தான் இந்திய அமெரிக்கா நிறுவனம் ஒன்று தனது சொந்த நாட்டுகாக உதவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எப்படி எனில் 3.4 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை நியூயார்க் மற்றும் லூதியானாவுற்கு கொடுத்து உதவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யார் இந்த உற்பத்தியாளர்?
அமெரிக்காவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவரான நியூஜெர்சியை சேர்ந்தவரும், மிகப்பெரிய பில்லியனர்களில் ஒருவரான சிராக் மற்றும் சிந்து படேலுக்கு சொந்தமானது தான் Amneal Pharmaceuticals நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது அதன் பல்வேறு உற்பத்தி தளங்களில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை தயார் செய்வதாக அறிவித்துள்ளது.
நியூயார்கிற்கு தானம்
போதுமான மாத்திரைகளை தயாரித்து வருவதாகவும், இது மொத்த விற்பனையாளர்கள் மூலமாகவும், அதே தேவைப்படும் பெரிய நிறுவனங்களுக்கு நேரிடையாகவும் ,நாடு முழுவதும் விற்பனை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் 2 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை நியூயார்க் நகரத்திற்கு தானமாக வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்படியும் ஒரு திட்டம் உள்ளது
இது மட்டும் அல்ல இந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ மனைகளுக்கு நேரடியாக நன்கொடையாக வழங்குவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்ல லூசியானவிற்கு இந்த நிறுவனம் 4,00,000 லட்சம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் வெளியாகும் மனிதாபிமானம் மிக்க செயல் இதுவாகும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications