பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்பவர்கள் தான் சம்பளம் பெறுவார்கள். ஆனால் அபுதாபியில் ஒரு நபர் நிறுவனத்தில் வேலைக்கு செல்லாமலேயே 26 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறார். அதுவும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவருக்கு இந்த சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது .
அபுதாபியை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து வேலையே தொடங்காத ஒரு நபருக்கு 1,10,400 திராம்களை வழங்க வேண்டும் என அபுதாபி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது இது சுமார் 26 லட்சம் ரூபாய் ஆகும். தி கலீஜ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி ஒரு நபர் அபுதாபியில் செயல்படக்கூடிய ஒரு நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த வழக்கில் தான் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்காணலுக்கு சென்றதாகவும் அந்த நிறுவனம் தனக்கு வேலை வாய்ப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் . வேலை தொடர்பாக தனக்கும் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது, தனக்கு அடிப்படை சம்பளமாக 7200 திராம்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1, 69,000 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக ஒரு மாதத்திற்கு 24,000 திராம்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5, 65,000 ரூபாயை சம்பளமாக வழங்குவது என அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் நிறுவனம் எனக்கு வேலையில் சேர்வதற்கான ஆஃபர் லெட்டரை வழங்கியதே தவிர எப்பொழுது முதல் நான் என்னுடைய வேலையை தொடங்க வேண்டும் எப்பொழுது முதல் அலுவலகம் வர வேண்டும் என்பதற்கான தேதி மற்றும் பிற விவரங்களை அறிவிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். நிறுவனம் என்னை அழைக்கும் நான் என் வேலையை தொடங்கலாம் என காத்திருந்தேன் ஆனால் நீண்ட காலம் வேண்டுமென்றே தாமதப்படுத்தி என்னை வேலைக்கும் அழைக்காமல் சம்பளமும் கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர் என குறிப்பிட்டு இருந்தார்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி வரை நிறுவனம் எனக்கு வேலையே வழங்காமல் காத்திருக்க வைத்தது. இந்த காலகட்டத்தில் எனக்கு சம்பளமும் வழங்கவில்லை என அவர் தன்னுடைய மனுவில் கூறி இருக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டு என்னுடைய சம்பளத்தை பெற்று தர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம் ஊழியருக்கும் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் படி பார்க்கும்போது நிறுவனம்தான் இந்த ஊழியர் வேலை செய்வதற்கான தேதியை குறிப்பிடாமல் தாமதப்படுத்தி இருப்பது என்பது உறுதியாகிறது என தெரிவித்திருக்கிறது. அபுதாபியில் நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் சட்டத்தின்படி நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஊழியருக்கு வழங்கப்படாத சம்பளம் என்ற பிரிவின் கீழ் 1,10,400 திராம்கள் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 26 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நிறுவனம் முன் வைத்த எந்த ஒரு வாதத்தையும் நீதிமன்றம் ஏற்கவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications