ஒரு வயதான பிரெஞ்சு பெண்ணின் சமையலறையில் மாட்டப்பட்டிருந்த ஒரு பழங்கால ஓவியம் சுமார் 188 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம், 13வது நூற்றாண்டில் வரையப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சிமாபூ என்ற இத்தாலிய ஓவியரால் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் அப்படி என்ன சிறப்பு? எதற்காக இவ்வளவு விலை? இதைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.
சிமாபூவின் தனி மதிப்பு
சிமாபூவின் காலத்தில் பல ஓவியக் கலைஞர்கள் இருந்தாலும், இவரின் ஓவியத்துக்கு தனி மதிப்பு உண்டாம். சிமாபூவின் ஓவியங்களில் இவரது ஓவியத்தில் அதிகளவு புள்ளிவிவரங்களுடன், துல்லிய கலைநயத்துடன் இருக்குமாம். அந்த அளவுக்கு சிறந்ததாகவும் தத்ரூபமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவ்வகையில் சிமாபூவின் ஆரம்பகால மறுமலர்ச்சியின் தலைசிறந்த ஓவியம் என்றும் கூறப்படுகிறது.
சமையலறையில் தலை சிறந்த ஓவியம்
பாரிஸில் உள்ள டர்கின் கேலரியின் ஓவிய நிபுணரான ஸ்டீபன் பிண்டா, கடந்த ஜூன் மாதத்தில் வடக்கு பிரான்சில் உள்ள காம்பீக்னேயில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது, அங்கே சமையலறையின் மேல் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை கண்டார். அதை ஆய்வு செய்தவர், அதை நிபுணர்களின் ஆய்வுக்கு கொண்டு வரவும் பரிந்துரைத்தார். மேலும் இது மறுமலர்ச்சியின் தந்தை என்றும் கூறப்படும் சிமாபூவின் ஓவியம் என கண்டுபிடித்துள்ளார்.
எவ்வளவு விலைக்கு போகும்?
கிறிஸ்ட் மோக் நகரத்தில் உள்ள இந்த ஓவியம் 4- 6 மில்லியன் பவுண்டு விலைக்கு போகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பழைய ஓவியம் உண்மையான மதச் சின்னம் என்று நம்புவதாக மதிப்பிட்டுள்ளனர். இந்த ஓவியம் 24*20 சென்டிமீட்டர் அளவு உள்ளதாகவும், இது 1280ல் இது ஒரு பாலிப்டிச்சின் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது. இது மிக அழகாக வர்ணம் பூசப்பட்ட காட்சிகளின் பெரிய படைப்பு பல பேனல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதையும் சித்தரிப்பதாகவும் கூறப்படுகிறது.
தனித்துவமான படைப்பு
இந்த ஓவியத்தின் கண்டுபிடிப்பு, கலை உலகம் முழுவதும் உற்சாகத்தின் சிற்றலைகளை அனுப்பியுள்ளது என்றும், சிமாபூ போன்ற ஓவியர்களின் அரிதான ஒரு தனித்துவமான படைப்பு சந்தைக்கு வரும்போது, இது போன்ற பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. அந்த வகையில் இந்த ஓவியம் தனித்துவமான, ஒரு அற்புதமான நினைவுச் சின்னமாகவே கருதப்படுகிறது.
என்ன சிறப்பு
இந்த ஓவிய விற்பனை எங்களின் எல்லா கனவுகளுக்கும் அப்பாற்பட்டது. இந்த நிலையில் இந்த ஓவியத்துக்கு சொந்தக்காரர் 90 வயதை தொட்டிருக்கும் நிலையில், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஏனெனில் அது இப்போது அவரை ஒரு மில்லியனராக ஆக்கியுள்ளது. இந்த ஓவியத்தில் முகபாவங்கள் மற்றும் கட்டிடங்களில் உள்ள ஒற்றுமையையும் ஒளி மற்றும் தூரத்தை வெளிப்படுத்தும் ஓவியரின் நுட்பங்களையும் அந்த ஓவியத்தில் சுட்டிக் காட்டியுள்ளார் ஓவியர்.
ஏலத் தொகை எவ்வளவு?
ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு தான் ஏலத்திற்கு போகும் என்றும் நினைத்திருந்த இந்த ஓவியத்தை, பாரிஸை சேர்ந்த ஒருவர் 20.7 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் எடுத்துள்ளதாகவும், பாரிஸில் ஆக்டியோன் என்ற ஏல நிறுவனத்தின் தலைவர் டொமொனிக் லி கோயண்ட் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications