போயிங் விமான கோளாறு.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நபர் மர்மமான முறையில் மரணம்..!!

விமான தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகவும், இத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாகவும் இருக்கும் இந்த அமெரிக்க சாம்ராஜ்ஜியம் கடந்த சில வருடங்களாகத் தனது 737 MAX விமானங்களில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் போயிங் 737 MAX விமானங்களை வாங்கி குத்தகைக்கு எடுத்த விமான நிறுவனங்கள் இதை முழுமையாக இயக்க முடியாமல் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் 737 MAX விமானங்கள் தொடர்பான குற்றங்களை வெளியிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

 போயிங் விமான கோளாறு.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நபர் மர்மமான முறையில் மரணம்..!!

போயிங் விமான நிறுவனத்தின் விமான பாகங்களை உற்பத்தி செய்யும் ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றிய ஜோஷ்வா டீன் (Joshua Dean), திடீர் மற்றும் வேகமாகப் பரவும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு 45 வயதில் உயிரிழந்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் தவறுகளை அம்பலப்படுத்திய மற்றொரு அதிகாரியான ஜான் பார்ட்னெட் (John Barnett) இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜோஷ்வா டீன் மரணம் அடைந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜான் பார்ட்னெட் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோஷ்வா டீன் சுவாசக் கோளாறு காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ECMO இயந்திரம் உட்படத் தீவிர மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், டீன் சில நாட்கள் போராடி மரணமடைந்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் 737 MAX விமானங்களில் தயாரிப்பு குறைபாடுகளை ஸ்பிரிட் நிறுவனத்தின் தலைமை மறைக்க முயல்கிறது என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களில் ஜோஷ்வா டீன்-ம் ஒருவர்.

விமானத்தின் பிரஷரை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும், aft pressure bulkhead-ல் தவறாகத் துளையிடப்பட்ட துளைகள் உள்ளிட்டவற்றை ஜோஷ்வா டீன் ஆவணப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காகவே பழிதீர்க்கும் வகையில் அவர் ஏப்ரல் 2023 இல் ஸ்பிரிட் நிறுவனம் பணிநீக்கம் செய்துவிட்டதாக ஜோஷ்வா டீன் கூறினார்.

ஜோஷ்வா டீனின் மரணம், மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட John Barnett-ன் மரணத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பிரச்சனைகளை வெளிப்படுத்தியதற்காக இவர் மீது வழக்கு போடப்பட்டிருந்த நிலையில் பார்னெட் தற்கொலை செய்து கொண்டார்.

போயிங் 787 ட்ரிம்லைனர் விமானத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக அம்பலப்படுத்தியதற்காகப் பழி நடவடிக்கைகளை எதிர்கொண்ட சம் ஸாலேஹ்பூர் (Sam Salehpour) என்ற முன்னாள் போயிங் பொறியாளர், கடந்த மாதம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பேசுகையில், பாதுகாப்பு அபாயங்களைக் கொண்டிருந்தாலும் குறைபாடுடைய உபகரணங்களை விற்பனை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கும் போயிங் நிறுவனத்தின் உள் கலாச்சாரத்தைப் பற்றி பொதுவெளியில் பேசினார்.

போயிங் நிறுவனம் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டாலும், மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உறுதியளித்துள்ளது. மேலும் போயிங் 787 ட்ரிம்லைனர் விமானத்தின் பாதுகாப்பு குறித்த சம் ஸாலேஹ்பூர்-ன் (Sam Salehpour) குற்றச்சாட்டுகளை போயிங் நிறுவனம் மறுத்துள்ளது.

மேலும் போயிங் நிறுவனம் தனது விமானத்தை விரிவான சோதனைகளை மேற்கொண்டும், அதில் எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை என்பதாக போயிங் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+