அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியர்கள் அமெரிக்காவிற்கே வரக்கூடாது என பல முட்டுக்கட்டை போடுகிறார். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை செய்யக்கூடாது , அமெரிக்க நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறுகிறார்.
அண்மையில் கூட இந்திய டெக்கிகள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவில் பல கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்தார். ஆனால் இந்தியர்களின் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்த வெளியாக கூடிய தகவல்கள் இருக்கின்றன. ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்தியநாதெல்லா, பெர்பிளெக் சிட்டி நிறுவனத்தின் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் என அமெரிக்க நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருக்கும் இந்தியர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஏஐ நிறுவனமான ஆந்த்ராபிக் (Anthropic AI) நிறுவனத்தின் தலைமை பொறுப்பு இந்தியருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏஐ பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. ஏஐ சம்பந்தப்பட்ட ஆய்வுகளை நடத்தக்கூடிய இந்த நிறுவனம் தன்னுடைய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் பாட்டிலை நியமனம் செய்திருக்கிறது.
கூகுள், மெடா ,மைக்ரோசாப்ட் ஆகியவை ஏஐ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அவற்றுக்கு சவாலாக தான் Anthropic நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பினை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஐடி உள்கட்டமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ராகுல் பாட்டிலுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது.
ஏஐ உள்கட்டமைப்பு, தயாரிப்புகள் ,ஏஐ சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகள், பொறியியல் என அனைத்து பிரிவுகளுக்கும் ராகுல் பாட்டில் தான் இனி தலைமை வகிக்கப் போகிறார். இங்கே வேலைக்கு சேர்வதற்கு முன்னதாக ஃபின்டெக் நிறுவனமான ஸ்டிரைப்பில் வேலை செய்தவர். ஐந்தரை ஆண்டு காலம் அங்கே பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வந்த இவர் அண்மையில் தான் அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பதவி ஏற்றார்.
அதற்கு முன்னர் ஒராக்கிள், அமேசான் வெப் சர்வீசஸ் , மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களில் எல்லாம் இவர் பிரதான பதவிகளை வகித்து வந்திருக்கிறார். பெங்களூரு பிஇஎஸ் பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பேச்சுலர் டிகிரி முடித்திருக்கிறார். இதனை அடுத்து அமெரிக்கா சென்ற இவர் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் முது நிலைப் பட்டப்படிப்பும் , வாஷிங்டன் பல்கலைகழகத்தில் எம்பிஏவும் படித்திருக்கிறார் .
ஐடி உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக ராகுல் பாட்டில் திகழ்ந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் ஆயிரமாக இருந்த இந்த நிறுவனத்தின் பிசினஸ் கஸ்டமர்களின் எண்ணிக்கை தற்போது மூன்று லட்சமாக அதிகரித்து இருக்கிறது நிறுவனத்தின் வருமானம் 87 மில்லியன் டாலர்களாக இருந்து 5 பில்லியன் டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. கூடிய விரைவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்நிறுவனம் கால் பதிக்க இருக்கிறது .
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications