1000 மாணவர்களின் விசா ரத்து செய்த அமெரிக்கா..! இந்தியர்களுக்கும் பாதிப்பு.. என்ன நடக்கிறது?

அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் 1000க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு நடத்திய செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவில் 160 கல்லூரிகளில் பயின்று வரும் 1024 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறது. மாணவர்களுக்கு முன்கூட்டியே எந்த வித நோட்டீசும் வழங்காமல் அவர்களின் விசாரித்து செய்யப்பட்டதற்கான விளக்கம் ஏதும் தராமல் திடீரென அவர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு வருவதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து குடியேற்ற கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

1000 மாணவர்களின் விசா ரத்து செய்த அமெரிக்கா..! இந்தியர்களுக்கும் பாதிப்பு.. என்ன நடக்கிறது?

குறிப்பாக அமெரிக்காவிற்கு வெளிநாட்டவர்கள் அத்தனை எளிதாக விசா பெற்று வந்துவிட முடியாத அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சூழலில் ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் சர்வதேச நாடுகளின் மாணவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை டிரம்ப் நிர்வாகம் தந்து வருகிறது.

அந்த வகையில் தான் திடீரென மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்படுவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் சென்று அங்கு இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயில வேண்டும் என்றால் F1 மாணவர் விசாவை பெற்று இருக்க வேண்டும். குறிப்பிட்ட அந்த மாணவர்கள் அவரின் வங்கிக்கணக்கில் கணிசமான அளவு நிதி இருப்பதை உறுதி செய்வதற்கான சான்றுகளை வழங்க வேண்டும், மேலும் எந்த கல்லூரியில் அட்மிஷன் பெற்றிருக்கிறார்களோ அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தந்து கல்வி பயிலும் போது எந்த ஒரு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கல்லூரிகளில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் Optional Practical Training என்ற திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டும் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அமெரிக்காவில் தங்கி கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விசா உள்ளிட்டவற்றை SEVIS-the Student and Exchange Visitor Information System என்ற அமைப்பின் மூலம் அமெரிக்க அரசு கண்காணித்து வருகிறது.

பொதுவாக கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் குறிப்பிட்ட மாணவர்களின் வருகை, அவர்கள் படிப்பை முடித்துவிட்டு பட்டம் பெறுவது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த அமைப்பினுள் அவ்வப்போது அப்டேட் செய்துவிடும். இந்த நிலையில் திடீரென அமெரிக்க அரசே இந்த அமைப்பில் பல்வேறு மாணவர்களின் மாணவர் விசாக்களை ரத்து செய்து இருப்பதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கூட அரசு எந்த ஒரு தகவலும் அளிக்கப்படவில்லை என விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

பல்வேறு மாணவர்களுக்கு எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் அரசு அவர்களின் விசாக்களை ரத்து செய்து இருப்பதாக கல்லூரி நிர்வாகங்களே புகார் கூறுகின்றன. இது தொடர்பாக மாணவர்களுக்கு எந்த ஒரு தகவலும் வழங்கப்படவில்லை என்றும் திடீரென அவர்களுக்கு மெசேஜ் மூலம் உங்களுடைய விசா ரத்து செய்யப்பட்டு விட்டது என அறிவிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு விசா ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து பல்வேறு மாணவர்களும் அமெரிக்க அரசின் இந்த செயல்பாட்டுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்தியாவை சேர்ந்த சின்மயி தியோரா என்ற மாணவரும் தன்னுடைய விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+