ஸ்மார்ட்போன் உலகில் பல பிராண்டுகள் இருந்தாலும் ஆப்பிள் போன் வைத்திருப்பது தனது கெத்து என்ற நிலை கடந்த சில வருடங்களில் மாறியுள்ளது. இதை அதிகப்படியானோர் வாங்குவது மூலம் இதன் கெத்து குறையவில்லை, ஆப்பிள் போன்களில் புதுமை குறைந்துவிட்டது, இதனால் ஆப்பிள் போன்களுக்கான கிரேஸ் மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது.
இதேபோல் சீனாவின் ஹூவாய் போன்கள் ஆப்பிள் போன்களை காட்டிலும் சிறப்பானதாக இருந்த வேளையில், ஆப்பிள் வர்த்தகம் கணிசமாக சரிய துவங்கியது. ஆனால் அமெரிக்க அரசும், பிற நாடுகளும் ஹூவாய் போன்கள் மீது விதித்த தடை ஆப்பிள்-க்கு சாதகமானது.

இந்த நிலையில் ஆப்பிள் வெறும் ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாமல் ஒரு டெக்னாலஜி நிறுவனமாகப் பார்க்கப்படும் காரணத்தால் டெக் வல்லுனர்கள் மத்தியில் ஆப்பிள் பொருட்கள் மீதும், அதன் தொழில்நுட்பம் மீதும் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
டெக் பிரியர்களும், ஆப்பிள் வெறியர்களும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ஆப்பிள் தனது ஏஐ செயல்பாட்டுக்காக ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருப்பது தான்.
ஆப்பிள் நீண்ட காலமாகக் கூகுள் உடன் சர்ச் இன்ஜின் இணைந்து செயல்பட்டு வரும் வேளையில் கூகுள் ஜெமினியை பயன்படுத்தாமல் மைக்ரோசாப்ட் முதலீட்டில் இயங்கும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
திங்கட்கிழமை நடந்த ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (Worldwide Developers Conference) நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ப்ரசென்டேஷனில், Apple Intelligence என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தளம் முக்கிய அறிவிப்பாக இருந்தது.
இந்த தளம், பயனர்களுக்கு தேவையான தகவல்களைச் சுருக்கமாக வழங்குவதோடு, புதிய படங்களை உருவாக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் உதவியாளரான சிரி (Siri)யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றிருந்தது.
ஆப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் போது, முதலீட்டாளர்களின் ரியாக்ஷன் மிகவும் முக்கியமானது. இதேவேளையில் ஆப்பிள் டெவலப்பர் கூட்டம் முடிந்த உடன் டெக் வல்லுனர்களின் கருத்துக்கள் முதலீட்டாளர்களின் சென்டிமென்ட்-ஐ அதிகம் பாதிக்க கூடியது.
இந்த நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 0.7% சரிந்தன. நியூயார்க் பங்குச்சந்தை திறப்பதற்கு முன்னதாக இந்த சரிவு காணப்பட்டது.
ஆனால் நேற்றைய வர்த்தக முடிவில் 7.26 சதவீதம் உயர்ந்து 207.15 டாலருக்கு முடிந்தது. புதன்கிழமை வர்த்தகத்தில் ஆப்பிள் பங்குகள் 175 டாலர் வரையில் சரியும் என சந்தை நிலவரங்கள் கூறுகிறது. திங்கட்கிழமை முடிவடைந்த வர்த்தகத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 1.9% சரிந்து $193.12 என்ற விலையில் முடிந்தன.
இதன் மூலம், இந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பெரிதாக மாற்றமடையவில்லை என்ற மந்த நிலைக்குச் சென்றுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஆப்பிள் பங்குகள் வெறும் 11.59 சதவீதம் உயர்ந்துள்ளது. இதோடு நிற்காமல் ஆப்பிள் டெவலப்பர் கூட்டம் முடிந்த பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய பாகங்களை வழங்கும் சில நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன.
இதற்கிடையில் ஆப்பிள் - ஓப்பன்ஏஐ கூட்டணி குறித்து எலான் மஸ்க் விமர்சனம், டெக் வல்லுனர்களின் கருத்துக்கள், ஆப்பிள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்காத புதிய ஏஐ அப்டேட்-கள், விரைவில் ஓய்வுபெறும் ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆகிய அனைத்தும் ஆப்பிள் பங்குகளின் 2 நாள் சரிவுக்கும், சமீபத்திய மந்த நிலைக்கும் காரணமாக உள்ளது.
ஆப்பிளின் முக்கிய சப்ளையரான தென்கொரியாவின் LG Innotek Co பங்குகளும், சீனாவின் Luxshare Precision Industry Co பங்குகளும் சரிந்துள்ளது. இவ்விரு நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 70 சதவீதம் ஆப்பிள் பங்கீடு உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications