உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக திகழும் ஆப்பிள் கடந்த சில வருடங்களாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், அதன் பிராண்ட் வேல்யூ குறைந்தாலும், விற்பனையை பெரிய அளவில் சரிவு ஏற்படாமல் காப்பாற்றிக்கொண்டது. இன்றளவும் அமெரிக்காவில் சிங்கம் போல முதல் இடத்தில் இருந்தாலும் சர்வதேச சந்தையில் பல நாடுகளில் தனது வர்த்தகத்தை வேகமாக இழந்து வருகிறது ஆப்பிள். இதில் முக்கியமான சந்தை சீனா.
ஒரு காலத்தில் சீன ஸ்மார்ட்போன் சந்தையை கட்டியாண்டு வந்த சீன சந்தையில் தற்போது மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தை இழந்து தவித்து வருகிறது. இந்த நிலையில் தான் சீனாவில் தனது சந்தை பங்கை அதிகரிக்க திட்டமிட்டு, குறிப்பாக ஹுவாவே போன்ற உள்ளூர் பிராண்டுகளின் ஆதிக்கத்தை எப்படியாவது தகர்த்துவிட வேண்டும், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற இலக்குடன் லாபம் குறைந்தாலும் சரி என அதிரடியான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

ஆப்பிள் தனது சமீபத்திய ஐபோன் மாடல்களில் கணிசமான தள்ளுபடிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. சீனாவில் ஜனவரி 4 முதல் 7 வரை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த ப்ரோமோஷன், குறிப்பிட்ட கட்டண முறைகளைப் பயன்படுத்தி வாங்கும் போது ஐபோன் மாடல்களுக்கு 500 யுவான் ($68.50) வரை தள்ளுபடியை வழங்குகிறது.
உதாரணமாக 7,999 யுவான் விலையில் தொடங்கும் ஃப்ளாக்ஷிப் ஐபோன் 16 ப்ரோ மற்றும் 9,999 யுவான் விலையில் கிடைக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை 500 யுவான் தள்ளுபடியையை அறிவித்துள்ளது. ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகியவை 400 யுவான் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன் 16 ப்ரோ வெறும் 88,000 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்தியாவில் இதன் விலை 1,20,000 ரூபாயாக உள்ளது.
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் சீன பொருளாதாரத்திற்கு மத்தியில் ஆப்பிளின் இந்த தள்ளுபடி பலன் அளிக்குமான என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது. ஆப்பிள் தனது வர்த்தகத்தை சீன நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஹுவாவே நிறுவனத்திடம் இழந்து வருகிறது.
ஹுவாவே ஆகஸ்ட் 2023ல் சொந்தமாக தயாரிக்கப்பட்ட சிப் செட் வைத்து அறிமுகம் செய்யப்பட்ட ப்ரீயமியம் போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏதிர்கொண்டது. இதில் தான் ஆப்பிள் தனது வர்த்தகத்தை இழக்க துவங்கியது, இதேவேளையில் தான் சான் ஹுவாவே நிறுவனமும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சமீபத்தில் தள்ளுபடியை அறிவித்தது.
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் டாப் ஐந்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஆப்பிள் வெளியேறினாலும், மூன்றாவது காலாண்டில் மீண்டும் டாப் 5 லிஸ்ட்-க்குள் நுழைந்தது. இருப்பினும், அதன் சந்தை பங்கு சிறிது குறைந்தது, அதே காலகட்டத்தில் ஹுவாவேயின் விற்பனை 42% அதிகரித்தது என்று ஆராய்ச்சி நிறுவனமான IDC தெரிவித்துள்ளது.
இதேபோல் ஜப்பான் நாட்டிலும் கூகுள் பிக்சல் போன்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்ட நிலையில் ஆப்பிள் மெல்ல மெல்ல தனது வர்த்தகத்தை கூகுளிடம் இழந்து வருகிறது.


Click it and Unblock the Notifications