அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நுட்ப ஜாம்பவான் ஆன ஆப்பிள் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி டிக் குக் ஆவார். இவரின் வருட சம்பளம் என்ன என்பதை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 3 டிரில்லியன் டாலரினை எட்டி சாதனை படைத்தது.
இதற்கிடையில் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரியான டிக் குக்கின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது..
வளர்ச்சிக்கு ஏற்ப சம்பளம்
இது உண்மையிலேயே அனைவரையும் வாவ் சொல்ல வைத்துள்ளது எனலாம். ஆப்பிள் நிறுவனத்தின தலைமை செயல் அதிகாரியாக 2011ம் ஆண்டு பதவியேற்ற டிம் குக், 10 ஆண்டுகளுக்கு இந்த பணியில் இருப்பார் என ஒப்பந்தம் போடப்பட்டது.எனினும் 2025 வரை இவரே இந்த பதவியில் நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனத்தின் பங்கு மதிப்பிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.
சம்பளம் எவ்வளவு?
இதற்கிடையில் 2021ம் ஆண்டிக்கு சம்பளம் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அதில் டிம் குக்கின் சம்பளம் 3 மில்லியன் டாலராகும். 82 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளும் அவார்டாக கிடைத்துள்ளது. அது போல ஈக்விட்டி அல்லாத ஊக்கத் தொகையாக 12 மில்லியன் டாலரும், அதுபோக மற்ற ஊக்கத் தொகையாக 1.39 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டுள்ளது.
சம்பளம் + அலவன்ஸ்
இந்த 1.39 மில்லியன் டாலரில் 7,12,488 டாலர் விமான அலவன்ஸ் ஆகவும், 6,30,630 டாலர் பாதுகாப்பிற்காகவும், 23,077 டாலர்கள் விடுமுறைக்காவும், இன்சூரன்ஸ் பிரீமியமாக 2964 மற்றும் 17400 டாலர்களும் அடங்கும். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக சேர்க்கும்போது 98 மில்லியனுக்கும் அதிகமான தொகையினை டிக் குக் பெறுகிறார். இதன் இந்திய மதிப்பு சுமார் 730 கோடிக்கும் மேல். ஆப்பிள் நிறுவனம் டிம் குக்கிற்காக, அவரின் பாதுகாப்பு காரணம் கருதி தனிப்பட்ட விமானத்தினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிளின் வளர்ச்சி
2021ம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் முந்தைய ஆண்டினை காட்டிலும் 33% வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர விற்பனையானது 2021ல் 365.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதே 2020ல் 274.5 பில்லியன் டாலராகவும், 2019ல் 260.2 பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது.
எங்கு எவ்வளவு விற்பனை?
இந்த விற்பனை விகிதத்தில் அமெரிக்காவில் 153.3 பில்லியன் டாலர்களும், ஐரோப்பாவில் 89.3 பில்லியன் டாலராகவும், சீனாவில் 68.4 பில்லியன் டாலராகவும், இதே ஜப்பானில் 28.5 பில்லியன் டாலராகவும், ஆசிய பசிபிக் நாடுகளில் 26.4 பில்லியன் டாலர் விற்பனையும் செய்துள்ளது.
என்ன பொருட்கள்?
ஆப்பிளின் மிகப்பெரிய நம்பகமான அஸ்திரமான ஆப்பிள் ஐபோன் விற்பனையானது 192 பில்லியன் டாலர் மதிப்பிலும் , மேக் 35.2 பில்லியன் டாலர் மதிப்பிலும், ஐபேடு 31.9 பில்லியன் டாலர் மதிப்பு, மற்ற பொருட்கள் 38.4 பில்லியன் டாலர் மதிப்பிலும் விற்பனை செய்யபபட்டுள்ளன. இது தவிர சேவை மூலமாக 68.4 பில்லியன் டாலரும் வருமானத்தில் பங்கு வகித்துள்ளன.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications