2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன் தயாரிப்பை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சந்தையில் இனி ஐபோன் தட்டுப்பாடு நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதம் 19-25ஆம் தேதி காலகட்டங்களில் உலக நாடுகளில் செய்யப்பட்ட மொபைல் ஆக்டிவேஷனில் ஐபோன் மற்றும் ஐபேட் ஆக்டிவேஷன் எண்ணிக்கை மட்டும் 44 சதவீதமாக. இது சந்தையின் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தை விடவும் மிகவும் அதிகமாகும்.
2016ஆம் ஆண்டில் முதல் காலகட்டத்தில் ஐபோன் தயாரிப்பை 30 சதவீதம் குறைத்த நிலையில் 2017ஆம் 10 சதவீதம் மட்டும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
2016ஆம் ஆண்டில் உலக நாடுகளில் செய்யப்பட்ட மொபைல் ஆக்டிவேஷனில் 49.1 சதவீதம் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள். இதன் மூலம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications