கூப்பர்டினோ: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், மொபைல் மற்றும் ஸமார்ட்போன் சந்தையைப் புரட்டிபோட்ட ஐபோன்-ஐ அறிமுகம் செய்து 9 வருடம் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் 1 கோடி ஐபோன்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
கூப்பர்டினோ பகுதியில் இருக்கும் ஆப்பிள் தலைமையகத்தில் நடந்த ஊழியர்கள் கூடத்தில் ஆப்பிள் சீஇஓ டிம் குக் 100 கோடி ஐபோன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்தார்.
சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுக நாள் முதல் தனிப்பட்ட கவனத்தை மக்கள் மத்தியில் ஈர்க்கிறது. இதற்கு முழுமையான காரணம் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் எளிமையான வடிவம் மற்றும் தொழில்நுட்பம் தான். இன்றைய மக்களின் தினசரி வாழ்வில் ஐபோன் என்பது ஒரு அங்கமாக மாறிய நிலையில் கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் 100 கோடிவது ஐபோனை விற்பனை செய்துள்ளது. இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என டிம் குக் தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஜூன் 29, 2007ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்ட 9 வருடங்களில் 100 கோடி மொபைல் விற்பனை செய்தது ஆப்பிள் நிறுவனம் மட்டும். அதுவும் தனது அனைத்து அறிமுகங்களும் ஆடம்பர சந்தைக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிற்குப் பின் நவம்பர் 2007ஆம் ஆண்டுப் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அயர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோனின் குறைந்தபட்ச விலை 499 டாலர் 2017ஆம் ஆண்டு ஐபோனின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் ஐபோன் டிசைனில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக ஆப்பிள் சீஇஓ டிம் குக் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன்
டிம் குக்
ஜூன் 29,2007
உலகச் சந்தை
முதல் ஐபோன் விலை
புதிய ஐபோன்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications