என்னது 800 பில்லியன் டாலரா.. குத்தாட்டம் போடும் 'ஆப்பிள்'..!!

என்னது 800 பில்லியன் டாலரா.. குத்தாட்டம் போடும் 'ஆப்பிள்'..!!

இன்றைய இளைஞர்களுக்கு வேலையாக இருந்தாலும் சரி, போனாக இருந்தாலும் சரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது தனி ஈர்ப்பு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் இருக்கும் தொழில்நுட்பம் உலகில் யாரிடமும் இல்லாத ஒன்று, அதனால் சந்தையில் இதற்குத் தனிப் பெருமை உண்டு. இதுவே இத்தகைய ஈர்ப்புக்கு முக்கியமானதாக உள்ளது.

சரி நாம மேட்டருக்கு வருவோம். ஆப்பிள் நிறுவனம் தற்போது குத்தாட்டம் போடுவதற்கு என்ன காரணம்.?

நிறுவனங்களும் மதிப்பீடுகளும்..

நிறுவனங்களும் மதிப்பீடுகளும்..

பொதுவாக நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் அதன் பங்குகளின் விலை பொருத்து அது மதிப்பீடு செய்யப்படும். இவ்வாறு ஒரு பங்கின் விலை ஏறினாலும் இறங்கினாலும், நிறுவனத்தின் மொத்த மதிப்பீடும் மாறுபடும்.

பங்குகின் விலை உயர வேண்டும் என்றால் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை அடைய வேண்டும்.

 

போட்டி

போட்டி

இந்த மதிப்பீடு போட்டி நிறுவனங்களிடையே கடுமையாக இருக்கும்.

உதாரணமாக இந்தியாவில் ரிலையன்ஸ், டிச்எஸ் மற்றும் எச்டிஎப்சி, ஐடிசி ஆகியவற்றின் மத்தியில் எப்போதும் போட்டி இருக்கும். இதுவே உலகளவில் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

இத்தகைய போட்டியில் தான் தற்போது ஆப்பிள் 800 பில்லியன் டாலர் என்ற வரலாறு உச்சத்தை அடைந்துள்ளது. இந்த மதிப்பீடு ஒவ்வொரு நிறுவனங்களின் கர்வம்.

 

முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு 700 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட ஆப்பிள் நிறுவனம் தற்போது சந்தை மதிப்பீட்டில் 800 பில்லியன் டாலர் என்ற இமாலய உயரத்தை அடைந்துள்ளது.

800 பில்லியன் டாலரைத் தொட்ட முதல் அமெரிக்க நிறுவனமாக ஆப்பிள் செவ்வாய்க்கிழமை உயர்ந்துள்ளது.

 

தொடர் வளர்ச்சி

தொடர் வளர்ச்சி

ஐபோன், ஐபேட், மேக் ஒஎஸ் எனத் தொழில்நுட்ப சந்தையில் பல முக்கியத் தயாரிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 33 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த பின் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 50 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.4

 

4 சதவீதம் ஆதிக்கம்

4 சதவீதம் ஆதிக்கம்

அமெரிக்காவில் S&P 500 குறியீட்டின் 21.7 டிரில்லியன் டாலர் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மட்டும் 4 சதவீதம், இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை விடவும் பல மடங்கு அதிகம்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்குப் பின் ஆப்பிள் நிறுவனம் சந்தையில் நிலைக்காது என்று பல கருத்துக்கள் நிலவினாலும், கருத்துக்கு ஏற்ப இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் சந்தையில் வெற்றி அடையவில்லை.

ஆயினும் மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு குறையவில்லை.

 

1 டிரில்லியன் டாலர்

1 டிரில்லியன் டாலர்

தற்போது இருக்கும் வர்த்தகத் திட்டங்களுடன் தொடர்ந்து இதேரபோன்ற வளர்ச்சியை ஆப்பிள் எட்டினால் அடுத்த வருடத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர் என்ற இமாலய வளர்ச்சியை அடையும்.

பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

3 மாதங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 140 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 153.99 டாலராக உள்ளது.

அடுத்த இடங்கள்

அடுத்த இடங்கள்

அமெரிக்கச் சந்தை மதிப்பீட்டில் ஆப்பிள் நிறுவனம் 800 பில்லியன் டாலரைத் தொட்டு முதல் இடத்தைப் பிடித்த நிலையில் இதனுடன் போட்டி போடும் நிறுவனங்களை நீங்கள் பார்க்க வேண்டாமா..?

டாப் 5 நிறுவனங்கள்

ஆல்பபெட் (கூகிள்): 580.77 பில்லியன் டாலர்
மைக்ரோசாப்ட்: 497.11 பில்லியன் டாலர்
மெர்க்ஷைர் ஹேத்தவே: 432.51 பில்லியன் டாலர்
அமேசான்: 402.42 பில்லியன் டாலர்

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+