நியூயார்க்: உலகின் முன்னணி டெக்னாலஜி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் 13 வருட ஐபோன் விற்பனையில் முதல் முறையாகச் சரிவை சந்தித்துள்ளது.
இதனால் 2வது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக இந்நிறுவனம் காலாண்டு முடிவுகளைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
தட தடவெனக் குறைந்த பங்கு மதிப்பு...
டிம் குக் தலைமையிலான ஆப்பிள் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட சில மணிநேரங்களில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 104 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனப் பங்குகள் தட தடவெனக் குறைந்து 96 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
2.7 லட்சம் கோடி
இதனால் ஒரு மணி நேரப் பங்கு வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர் குறைந்தது. இந்திய ரூபாய் மதிப்பின் படி இதன் மதிப்பு 2,66,160 கோடி ரூபாயாகும்.
ஆப்பிள் நிறுவன வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பாக இதைப் பார்க்கப்படுகிறது.
சந்தை மதிப்பு
பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப்பட்டால், இதன் மதிப்பைப் பங்குகளின் விலையைக் கொண்டு தான் சந்தையில் மதிப்பிடப்படும். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனப் பங்குகளின் விலை 105 டாலரில் இருந்து 96 டாலராகக் குறைந்த நிலையில், சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 40 பில்லியன் டாலர் அளவு குறைந்துள்ளது.
ஆப்பிள்
அமெரிக்க எஸ் அண்டு பி 500 சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் என்எஸ்ஈ சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தைப் போல் ஆப்பிள் உள்ளது.
டிம் குக்
இந்த மிகப்பெரிய சரிவில் இருந்து ஆப்பிள் மீளச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை ஆப்பிள் நிறுவனம் வாங்க உள்ளதாக இந்நிறுவனத்தின் சிஈஓ டிம் குக் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications