ஆப்பிள் நிறுவனத்தின் தித்திக்கும் காலாண்டு முடிவுகள்.. 3 மாதத்தில் 51.5 பில்லியன் டாலர் வருமானம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: உலகின் மிகவும் லாபகரமான நிறுவனமாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் சுமார் 30 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது.

 

இதனால் நியூயார்க் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

வருவாய்

ஜூலை - செப்டம்பர் 26ஆம் தேதி வரையிலான இந்நிறுவனத்தின் 4 வது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 51.5 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 42.1 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

லாபம்

லாபம்

ஆப்பிள் நிறுவனத்தின் 4வது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாப அளவு சுமார் 11.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் இதன் 8.5 பில்லியன் டாலராக இருந்தது.

விற்பனை

விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் என அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மொத்த வருவாயில் 62 சதவீதம் வெளிநாட்டுச் சந்தையில் செய்யப்பட்ட விற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்றது.

பங்கு லாபம்
 

பங்கு லாபம்

இக்காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு லாபம் சுமார் 38 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரி லூகா மேஸ்திரி தெரிவித்தார்.

விற்பனை

விற்பனை

ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் ஆப்பிள் நிறுவனம் 48 மில்லியன் ஐபோன்கள், 9.8 மில்லியன் ஐபேட்கள், 5.7 மில்லியன் மே கம்பியூட்டர்கள் விற்பனை செய்துள்ளது.

அதுமட்டும் அல்லாமஸல் ஆப்பிள் வாட்ச், டிவி, பீட்ஸ் ஹார்வேர், ஐபாட் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் ஆப்பிள் நிறுவனம் சுமார் 3.04 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.

28 சதவீத உயர்வு

28 சதவீத உயர்வு

2015ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த வருவாய் 28 சதவீதம் உயர்ந்து 234 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple net profit beats estimates, surges 30 per cent to $11.1 billion

Apple Inc painted a rosy picture for its new iPhones as it reported quarterly results on Tuesday, but investors were more focused on the company's next test: topping last year's record holiday sales.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X