வருடத்தில் இறுதியில் புத்தாண்டு கொண்டாடுவது, சாதாரண மக்கள். இதுவே டபுள் டமாக்காவுடன் கோலாகமாகக் கொண்டுபவர்கள் நிறுவன தலைவர்கள். ஆம், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் அளவீடுகளைச் சரிபார்த்து நிறுவன தலைவர்களுக்கான போனஸ் மற்றும் முழுமையான சம்பளம் ஆகியவை அறிவிக்கப்படும்.
குறிப்பாக வருடத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் வழக்கம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளில் உள்ளது. இந்தியாவில் நிதியாண்டின் அடிப்படையில் அதாவது மார்ச் மாதத்திற்குப் பின் நிறுவன தலைவர்களுக்குப் போன்ஸ் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும்.
யார் இவர்..?
உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் அவர்களுக்குத்தான் இந்தப் புத்தாண்டு டபுள் டமாக்கவாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனம்
கடந்த வருடம் மோசமான வர்த்தகத்தின் காரணத்தாலும், சில தயாரிப்புகள் வெற்றி அடையாத நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அதிகளவில் சரிந்து, வர்த்தகத்தில் பின்தங்கியது.
சவால்
இத்தகைய சூழ்நிலையில் சவால் நிறைந்த 2017ம் ஆண்டைத் துவங்கிய டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் புதிய மாடல்களைச் சரியான திட்டமிடல் உடன் அறிமுகம் செய்து சந்தையில் வெற்றிபெற்றார்.
இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் கடந்த வருடத்தை விடவும் அதிகமாக இருந்தது.
74 சதவீத அதிகப் போனஸ்..
எப்போதும் இல்லாத அளவிற்குக் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் அதிகளவில் குறைந்து காணப்பட்டது இதன் காரணமாக, டிம் குக் குறைவான போனஸ் தொகையே பெற்றார்.
2017ஆம் ஆண்டில் நிறுவனம் அதிகப்படியான வருவாய் மற்றும் மொத்த வருவாய் நிகழ்ந்த திடீர் உயர்வு ஆகியவை டிம் குக் அவர்களின் போனஸ் தொகையை 74 சதவீதம் வரையில் உயர்த்தியது.
ஊக்கத் தொகை
இதன் மூலம் டிம் குக் 2017ஆம் நிதியாண்டுக்குப் போன்ஸ், ஊக்கத் தொகையாகச் சுமார் 9.33 மில்லியன் டாலரை பெற்றுள்ளாஸ்.
சம்பளம்
ஊக்கத் தொகையோடு, டிம் குக் இந்த வருடம் சம்பளமாக 3.06 மில்லியன் டாலரைப் பெற்றுள்ளார்.
பங்குகள்
2017ஆம் நிதியாண்டுக்கு ஏற்கனவே டிம் குக்கிற்காக அறிவிக்கப்பட்ட 89.2 மில்லியன் டாலர் அளவிலான பங்குகளையும் பெற்ற உள்ளார்.
600 கோடி ரூபாய்
ஆகமொத்தம் இந்த வருடம் மட்டும் டிம் குக் சுமார் 102 மில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் இது 653.718 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications