கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனரான டிம் குக் தனது மொத்த சொத்துக்களையும் மக்களுக்கு பயன்படும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகளவில் அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் தான் டிம் குக். ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பிறகு இந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் டிக் குக் கைக்கு மாறின.
தனது 785 மில்லியன் டாலர் சொத்து மதிப்பில் 10 வயது மருமகனின் (சகோதரரின் மகன்) கல்வி செலவுகள் போக மீதமுள்ள அனைத்தையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க தான் தயாராக உள்ளதாக பார்ச்சூன் பத்திரிக்கைக்கு அளித்த போட்டியில் தெரிவித்தார். குளத்தில் விழும் கூழாங்கல் தனது அதிர்வை குளம் முழுவதிலும் பரவச் செய்யும், அதுப்போல மக்களின் மத்தியில் மாற்றத்தை உருவாக்கும் கூழாங்கல் ஆக இருப்பேன் என டிம் குக் தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் 120 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளையும், விற்க முடியாத 665 மில்லியன் டாலர் பங்குகளையும் வைத்துள்ளார் டிம் குக். இதன் மொத்த மதிப்பு 785 மில்லியன் டாலர். உலகளவில் 2வது பணக்காரரான வாரன் பஃபெட் அவரின் "Giving Pledge" என்ற உறுதி மொழியை ஏற்று பல பணக்காரர்கள் தங்களின் பெரும் பகுதி பணத்தை மக்களுக்கு அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது டிம் குக் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். வருடம் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை மக்களுக்கும் அளிக்கும் எண்ணம் வெகு சிலருக்கே வரும். இதில் "Giving Pledge" மையக்கருத்தை உணர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், வாரன் பஃபெட் மற்றும் ஆரக்கிள் கார்ப் நிறுவனத்தின் லேரி எலிசன் ஆகியோர் இப்பட்டியலில் இணைந்துள்ளனர். இவர்களை பற்றி இந்த இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
785 மில்லியன் டாலர்
மாற்றம்
சொத்து மதிப்பு
வாரன் பஃபெட்
கொடை வள்ளல்கள்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications