ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோனுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. இந்திய வெற்றி வாய்ப்பைத் தானும் பயன்படுத்திக் கொள்ளச் சாம்சங் நிறுவனம் ஐபோன் டிசைனை காப்பி அடித்துச் சிக்கிக்கொண்டது. இதற்கான வழக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் இவ்வழக்கு முடிவடைந்தது.
இந்நிலையில் குவால்காம் நிறுவனத்தின் மீது ஆப்பிள் புதிய வழக்கைத் தொடுத்து 1 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டுள்ளது.
புதிய ஐபோன்
சமீபத்தில் வெளியான ஐபோன்களில் இருக்கும் fingerprint சென்ஸார் மற்றும் அதிகச் சேமிப்பு திறன் கொண்ட வடிவங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் குவால்காம் ராயல்ட்டி கேட்டு வழக்குத் தொடுத்துள்ளது.
எதிர் வழக்கு
இந்நிலையில் ஐபோனின் புதிய அறிமுகத்திற்கும் குவால்காம் தொழில்நுட்பத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், 100 பக்கங்கள் கொண்டு குற்றப்பத்திரிக்கையைத் தயார் செய்து சான்டியாகோ பெடரல் நீதிமன்றத்தில் குவால்காம் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.
டான் ரோசென்பெர்க்
இவ்வழக்குக் குறித்துக் குவால்காம் நிறுவனம் பதில் அளிக்க மறுத்தாலும், இந்நிறுவனத்தின் ஜெனரல் கவுன்சில், இந்த வழக்கை நாங்கள் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம், ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள குளறுபடிகளை வெளிக்கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம்
குவால்காம் நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் தொடுத்த வழக்கிற்கு, அரசு விதிமுறைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாக ஆப்பிள் நிறுவனத்துள்ளது. மேலும் குவால்காம் குற்றத்தை நிரூபணம் செய்ய முடியாவிட்டால் 1 பில்லியன் டாலர் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தகவல்கள்
வழக்கு மற்றும் நஷ்ட ஈடு தாண்டியும், ஐரோப்பா, தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய பகுதிகளில் ஆப்பிள் மற்றும் குவாகம் நிறுவனத்திற்கு மத்தியில் நடந்த வர்த்தகப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களையும் ஆப்பிள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
குவால்காம்
மொபைல் போன்களில் பயன்படுத்தும் சிப் தயாரிப்பில் முன்னணியாக இருக்கும் குவால்காம் நிறவனம் இத்துறையில் அதீத ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் தற்போது பல பிரச்சனைகளைக் கிளப்பி வருகிறது.
தென் கொரியா
சமீபத்தில் தென் கொரியா நாட்டில் நன்னடத்தை விதிகளை மீறியதன் காரணமாக 853 மில்லியன் டாலர் அபராத வழக்கை தற்போது குவால்காம் இந்நாட்டில் சந்தித்து வருகிறது.
பங்கு மதிப்புச் சரிவு
சான் டியாகோ பகுதியில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குவால்காம் நிறுவனப் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 2.4 சதவீதம் சரிந்து 62.88 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 22 சென்ட் அதிகரித்து 120 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications