கொரோனா பீதியிலும் நடந்த தரமான சம்பவம்.. போராட்ட களத்தில் குதித்த ஆப்பிள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிப்போர்னியா: கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க 4 லட்சத்தை தொடும் நிலையில், நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனால் அனைத்து உலக நாடுகளும் தொடர்ந்து பலவேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த கொடிய வைரஸ் கண்டறியப்பட்டு 67 நாட்களில் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,000 கடந்தது. எனினும் அதன் பிறகு 11 நாட்களில் 2 லட்சத்தை கடந்தது. இப்போது நான்கு நாட்களில் 3 லட்சத்தை கடந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 4 லட்சத்தை தொட உள்ளது கவனிக்கதக்கது.

இந்தியாவின் திறன்

இந்தியாவின் திறன்

இதற்கிடையில் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை வைத்தே அதன் தீவிரத்தை அறிய முடியும். இதனால் இந்தியா மக்கள் சுகாதாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலையில் இதனை எதிர்கொள்ள அனைத்து திறனும் இந்தியாவுக்கு உள்ளது. பெரிய அம்மை மற்றும் போலியோ போன்ற உலகை அழித்து கொண்டிருந்த நோய்களை ஒழிக்க உலகத்திற்கு வழிகாட்டியது இந்தியா தான். இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இதை ஒழிக்க வழி அறியும் திறன் இருக்கிறது என உலக சுகாதார நிறுவன செயல் இயக்குனர் டாக்டர். மைக்கேல் ஜெ ரியான் ஒரு செய்தியில் கூறியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

இப்படி ஒரு நிலையில் இந்த உலகளாவிய தொற்று நோயினை தடுக்க ஆப்பிள் நிறுவனம் ஒரு தரமான சம்பவத்தினை இயற்றியுள்ளது. அப்படி என்ன தரமான சம்பளம் என்று கேட்கிறீர்களா? ஆப்பிள் நிறுவனம் தனது பிராண்டில் மட்டும் தனித்துவம் அல்ல, தன்னால் இதைவிட சிறப்பான சம்பவத்தை செய்ய முடியும் என செய்து காட்டியுள்ளது.

நிதி நன்கொடையும் உண்டு

நிதி நன்கொடையும் உண்டு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவுக்கு வெளியே உள்ள அத்துணை சில்லறை விற்பனை கடைகளையும் மூடுவதாக செய்திகள் வெளியாகின. மேலும் சீனா முடங்கி போன நிலையில் அதன் வருவாயில் பெரிய அளவில் இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலும் கூட பல மில்லியன் மாஸ்குகளையும் மற்றும் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையினை கொரொனாவினால் சீர்குலைந்துள்ள நாடுகளை மீட்க உதவுவதற்காக கொடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. உலகளவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தங்களது வருவாயை இழப்பினை கருத்தில் கொள்ளாமல் மக்களின் பாதுக்காப்புக்காக இதுபோன்ற தரமான சம்பவங்கள் மிக நல்ல விஷயமே.

வேறு யாரெல்லாம் இந்த லிஸ்டில் உள்ளனர்

வேறு யாரெல்லாம் இந்த லிஸ்டில் உள்ளனர்

கடந்த வாரத்தில், அமேசான் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், மற்றும் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக்மா, என பல தலைவர்கள் கொரோனா பீதியிலும் மக்களுக்கு உதவுவதற்காக பல மில்லியன் மாஸ்குகளை அனுப்பின. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது அதனை செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple to donate millions of masks for health workers in US and Europe

Apple CEO Tim Cook announced that the company will be donating masks to health professionals during the coronavirus pandemic crisis. Also it’s committed $15 million to help with worldwide recovery.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X