ஐயா முருகதாஸா..? பிரான்ஸ் நாட்டுலயும் உங்க வேல தொடருதா? நஷ்டம் மட்டும் நாலு கோடிப்பு.!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஷயம் இது தான் தமிழகத்தில் முருகதாஸ் வருணின் கதையைத் திருடி படம் எடுத்தது போல, ஒரு டெக்னாலஜியைத் திருடி நான்கு கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்கிறார்கள். 1766-ல் தொடங்கி இன்று வரை ஏலம் விடும் இங்கிலாந்து நிறுவனம் கிறிஸ்டிஸ் (Christie's). இவர்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களை ஏலத்தில் விடுவது தான் வேலை. உலக தொலைக் காட்சியில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி கம்யூட்டர் வரைந்த ஒரு ஓவியத்தை 4.32 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு ஏலம் விட்டு இருக்கிறர்கள்.

தவறிய கணிப்பு
 

தவறிய கணிப்பு

ஒவ்வொரு கலைப் பொருள் மற்ரும் ஓவியங்களையும் விற்கும் முன் எவ்வளவு தேறும் என்று கணிப்பார்கள். அந்த கணிப்புகளை ஒட்டித் தான் பெரும்பாலும் ஏலம் போகும். ஆனால் இந்த Artificial Intelligence ஓவியம் விஷயத்தில் 4500% தவறாக கணித்தது கிறிஸ்டிஸ் ஏல நிறுவனம். அட ஆமாங்க. வெறும் 9000 - 10000 பவுண்ட் போகலாம் என்று கணித்து இருந்தவர்களுக்கு 4,32,500 பவுண்ட் ஸ்டெர்லிங் (இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய்) ஏலம் போனால் என்ன செய்வார்கள்.

Portrait of Edmond Belamy

Portrait of Edmond Belamy

இது தான் அந்த ஓவியத்தின் பெயர். Hugo Caselles-Dupré, Pierre Fautrel and Gauthier Vernier மாணவர்களோட Obvious குழு தான் Artificial Intelligence கோடிங் எல்லாம் செய்து இந்த ஓவியத்தை தயாரித்துள்ளனர். GAN (generative adversarial network) என்கிற தானே கற்றுக்கொள்ளும் (machine learning) முறையில் வரைந்து இருக்கிறார்கள்.

எத்தனை தரவுகள்

எத்தனை தரவுகள்

கிபி 1400 முதல் இன்று வரையான காலத்தில் பல்வேறு ஓவியர்களால் வரையப்பட்ட 15,000 பழைய ஓவியங்களைத் தான் GAN -ன் முதல் நிலைத் தரவாக கொடுத்து இருக்கிறார்கள். அதில் இருக்கும் ஸ்டோக்ஸ், லைன்ஸ், கலர் காம்பினேஷன் போன்ற சின்ன சின்ன கலை நுட்பங்களைக் கற்று அதை வைத்து GAN-ஐயே சொந்தமாக ஓவியம் வரையச் செய்து இருக்கிறார்கள். கம்யூட்டர் வரைந்த அந்த ஓவியத்தை தான் இப்போது ஒரு மாஸ்டர் காப்பி அச்சடித்து ஏலத்தில் விட்டுள்ளது இந்த obvious குழு.

அங்கயும் ஒரு முருகதாஸ்
 

அங்கயும் ஒரு முருகதாஸ்

இந்த GAN வழிமுறையை ராபி பராட் என்கிற 19 வயது மாணவர் வடிவமைத்தாகவும், அந்த வழி முறையைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்டு தான் இந்த portrait of edmond belamy என்று புகார்கள் எழுந்துள்ளன. முழுதாக இல்லையென்றாலும் முக்கால்வாசி முக்கியமான டெக்னிக்கல் விஷயங்கள் எடுக்கப்பட்டிக்கின்றன என்றே AI ஓவிய சமூகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். Open Licenseல் தான் இதை ராபி பராட் செய்துள்ளதால், இப்போது வந்திருக்கும் தொகையில் சட்டப்படி பங்கு கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. "எனக்கு பங்கு வேணாம், ஆனா இந்த GAN ஓவியத்துக்கு இவ்வளவு விலை போகும்ன்னு தெரியாமப் போச்சே, அத நெனச்சாத் தான் வருத்தமா இருக்கு" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

சொல்லாம சொன்னாங்க

சொல்லாம சொன்னாங்க

மறுபுறம் Obvious குழுவோ மொத்த AI சமூகத்துக்கும் தங்கள் நன்றிகளைத் தெரிவித்து, ராபி பாராட்டுக்கும் சிறப்பாக நன்றி கூறியுள்ளனர். ஏலத்தில் இவ்வளவு கோடி ரூபாய் கொட்டி ஓவியத்தை வாங்கியவருக்கு புகழ்ச்சி பிடிக்காது போல. தனது பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளாராம். அதனால் யார் இந்த முதல் AI ஓவியத்துக்கு சொந்தக் காரர் என்கிற செய்தியும் தெரியாமலேயே இருக்கிறதாம்.

இருந்தால் இது ஒரிஜினல் இல்ல

இருந்தால் இது ஒரிஜினல் இல்ல

வழக்கம் போல, கலை என்பது மனிதனால் படைக்கப்பட வேண்டிய உணர்வு. அதை கம்யூட்டர் தரவுகள் அடிப்படையில் தொடங்கும் என்றால் மனிதனின் கலை வெளிப்பாடே பாதிக்கப்படும். வழக்கம் போல் "இதுல ஆத்மா இல்ல, கை இல்ல, கால் இல்ல" என்று ஒரு தரப்பு விவாதத்தை முடுக்கி விட்டு இருக்கிறது. இதை எல்லாம் தாண்டி காசு பார்க்க இப்போது மேலும் ஒரு துறை கிடைத்திருக்கிறது. அதை ரசிக்கவும் ஆள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

artificial intelligence painting sold for 4 crore rupees

artificial intelligence painting sold for 4 crore rupees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more