2022க்குள் 5 நாடுகள் பிட்காயினை அரசு நாணயமாக ஏற்கும்.. சந்தை வல்லுனர்கள் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பிட்காயின் இன்று தவிர்க்க முடியாத முக்கிய முதலீடாக மாறியுள்ளது. இதேவேளையில் பிட்காயினுக்கு இணையாகப் பல கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான பாதுகாப்பு தன்மை, கிரீன் எனர்ஜி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பிட்காயினாகவும் உள்ளது.

எல் சால்வடோர்

எல் சால்வடோர்

இந்த நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு எல் சால்வடோர் நாட்டில் அமெரிக்க டாலருக்கு இணையாகப் பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

5 நாடுகள்

5 நாடுகள்

இது அனைத்து நாடுகளுக்கு இன்றைய காலகட்டத்தில் பொருந்தாது என்றாலும் அரசு கட்டுப்பாட்டில் நிதி பரிமாற்றம் இல்லாமல் இருக்கும் எல் சால்வடோர் போன்ற நாடுகளுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும். இந்த வகையில் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகில் 5 நாடுகளில் பிட்காயினை அதிகார்ப்பூரவ் நாணயமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

பிட்மெக்ஸ்

பிட்மெக்ஸ்

பிட்மெக்ஸ் என்ற முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் சிஇஓ-வான அலெக்ஸ் உலகில் பல முன்னணி நாடுகள் கிரிப்டோகரன்சியை அடுத்தடுத்து ஆதரித்து வரும் நிலையில், பிட்காயின் பயன்பாட்டு அளவு பெரிய அளவில் மேம்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பிட்மெக்ஸ் சிஇஓ

பிட்மெக்ஸ் சிஇஓ

இதேபோல் உலக நாடுகளில் பிட்காயினை ஏற்கும் மனப்பான்மை அதிகரிக்கும் வேளையில் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகில் 5 நாடுகளில் பிட்காயினை அதிகார்ப்பூரவ் நாணயமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது எனப் பிட்மெக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அலெக்ஸ் தெரிவித்துள்ளார். அதற்கு விதைப்போட்டது எல் சால்வடோர்.

ஜேபி மோர்கன் சேஸ்

ஜேபி மோர்கன் சேஸ்

ஜேபி மோர்கன் சேஸ் சமீபத்தில் தனது முதலீட்டாளர்களுக்கு முதலீடு பழக்கம் குறித்து அனுப்பிய முக்கியமான கடிதத்தில் உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம் பாதிப்புகளைக் குறைக்க முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைக் கைவிட்டுப் பிட்காயினில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

 இன்றைய கிரிப்டோகரன்சி விலை

இன்றைய கிரிப்டோகரன்சி விலை

பிட்காயின் - 57,378 டாலர் (0.48 சதவீத உயர்வு), எதிரியம் - 3,503.33 டாலர் (2.43 சதவீத சரிவு), ரிப்பிள் - 1.10 டாலர் (4.40 சதவீத சரிவு), கார்டானோ - 2.15 டாலர் (2.72 சதவீத சரிவு), போல்காடாட் - 33.49 டாலர் (3.96 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.22 டாலர் (4.10 சதவீத உயர்வு).

இன்று பிட்காயினைத் தவிரப் பெரும்பாலான கிரிப்டோகரன்சி சரிவை சந்தித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Atleast 5 Countries Will Accept Bitcoin as Legal Tender by 2022, Says Bitmex CEO Alex

Atleast 5 Countries Will Accept Bitcoin as Legal Tender by 2022, Says Bitmex CEO Alex
Story first published: Tuesday, October 12, 2021, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X