இத்தாலி : பிரபல ஆடி கார் நிறுவனத்தின் இத்தாலி தலைமை அதிகாரியான 62 வயதான ஃபாப்ரிஸியோ லோங்கோ மலை ஏற்றத்தின் போது 10,000 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்துக்கு எல்லையில் உள்ள அடமெல்லோ மலையில் அவர் மலை ஏற்றத்தில் ஈடுபட்ட போது இந்த விபத்து நிகழ்ந்தது.
சக நண்பர்களோடு லோங்கோ மலை ஏறியதாகவும் அப்போது 10,000 அடி உயரத்திலிருந்து அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. அவர் மலை உச்சியினை அடையும்போது கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் அவருடன் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இது தொடர்பாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 700 அடி பள்ளத்தில் இருந்து அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டது. அப்போதே அவர் உயிர் பிரிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவரது உடலானது மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு கேரிசோலா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்த போதிலும் அவர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. தற்போது அவரது இறப்பு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது, உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.
1962 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர் தான் லோங்கோ. இவர் அரசியல் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றவர். இவர் 1987 ஆம் ஆண்டு ஃபியாட் நிறுவனத்தில் வேலையை தொடங்கினார். அங்கே மார்க்கெட்டிங் துறையில் சிறந்து விளங்கிய அவர் 2002 ஆம் ஆண்டு லான்சியா நிறுவனத்தில் இணைந்தார். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டு ஆடி நிறுவனம் இவரை பணிக்கு எடுத்தது. 2013 ஆம் ஆண்டிலிருந்து இவர் இத்தாலியில் ஆடி நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.
அவரது இறப்பு தொடர்பாக ஆடி கார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த 11 ஆண்டு காலமாக லோங்கோ இத்தாலியில் ஆடி நிறுவனத்தை மிகச் சிறந்த இடத்தில் நிலை நிறுத்தி இருக்கிறார் என தெரிவித்துள்ளது. அவரது இறப்பு எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு என தெரிவித்துள்ளது.
லோங்கோவை பொறுத்தவரை மலை ஏறுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.அவர் அடிக்கடி அடமெல்லோ மலைப்பகுதியில் மலை ஏற்றத்தில் ஈடுபடுவார். அதேபோல பருவநிலை மாற்றங்களை தடுக்க வேண்டும் எனவும் அதற்கேற்ற வகையில் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications