ஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..!

வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் எனக் கனவுடன் இருக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளுக்கு அடுத்தாக முக்கியத் தேர்வாக இருப்பது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்ற உதவும் 457 விசா முறையை ஆஸ்திரேலிய அரசு நிரந்தரமாகத் தடை செய்துள்ளது.

457 விசா

457 விசா

அமெரிக்காவில் ஹெச்1பி விசா போல ஆஸ்திரேலியாவில் 457 விசா முறை வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சொல்லப்போனால் இந்தியர்களும் இந்திய நிறுவனங்களும் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு விசா முறை. இதைச் சில முக்கியக் காரணங்களுக்காக ஆஸ்திரேலியா அரசு நிரந்தரமாகத் தடை செய்து வழக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.

புதிய விசா முறை

புதிய விசா முறை

இந்நிலையில் 455 விசா முறைக்குப் பதிலாகப் புதிய விதிமுறைகளுடனும், பெயருடன் TSS விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TSS என்றால் தற்காலிக திறன் தட்டுப்பாடு (Temporary Skill Shortage) என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இங்கேயும் இந்தியாதான் கெத்து..

இங்கேயும் இந்தியாதான் கெத்து..

457 விசா மூலம் தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 90,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 22 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை

பிரச்சனை

இப்புதிய டிஎஸ்எஸ் விசா முறையில் அந்நாட்டில் பணியாற்றுவதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லையாம், ஆனால் நிரந்தரக் குடியுரிமை பெற நினைக்கும் வெளிநாட்டவர்களுக்கு இப்புதிய விசாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்கு வருத்தமான செய்தியாகவே அமைந்துள்ளது.

 

மாணவர்கள்

மாணவர்கள்

அதேபோல் இப்புதிய விசா மூலம் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தேர்வாகியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டில் வேலைக் கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக 2 வருட அனுபவம் தேவைப்படுகிறது. இதனால் இந்திய மாணவர்கள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

அதேபோல் நிறுவனங்கள் இப்புதிய டிஎஸ்எஸ் விசா மூலம் வேலைக்கு ஆட்களைச் சேர்வு செய்யும் விரும்பினால் நிறுவனம் அரசின் skilling fundக்கு உதவ வேண்டும்.

உள்நாட்டு மக்கள்

உள்நாட்டு மக்கள்

தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மூலம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அளிக்கும் போது கட்டாயம் உள்நாட்டு மக்களுக்குத் தான் அளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் இந்தியர்களுக்கு இதன் மூலம் கணிசமான பாதிப்பு ஏற்படும்.

 

டிஎஸ்எஸ் விசா

டிஎஸ்எஸ் விசா

ஆஸ்திரேலிய அரசு அறிமுகம் செய்துள்ள இப்புதிய விசா முறையில் 2பிரிவுகள் உள்ளது, ஒன்று குறுகிய கால விசா (STSOL) மற்றொன்று கால நீட்டிப்புக் கொண்ட விசா (MLTSSL).

குறுகிய கால விசாவில் 2 வருடம் மட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்ய முடியும். MLTSSL விசா முறையிலும் அடிப்படை விசா காலம் 2 வருடம் மட்டுமே என்றாலும் கூடுதலாக 2 வருடம் கால நீட்டிப்புச் செய்ய முடியும்.

 

 நிறுவனங்களுக்குச் சிக்கல்

நிறுவனங்களுக்குச் சிக்கல்

இப்புதிய விசா முறையில் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் நிறுவனம் skilling Australia fund திட்டத்திற்கு, ஒரு ஊழியருக்கு, ஒரு வருடத்திற்கு 1,200 டாலர் செலுத்த வேண்டும்.

ஆக 4 வருட விசாவில் ஒரு ஊழியரைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றால் நிறுவனம் 4,800 டாலர் செலுத்த வேண்டும். இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் இது 2,41,152 ரூபாய் (23 மார்ச்).

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+