அதானி குழுமத்தின் ரயில் பாதை திட்டத்திற்கு ஆஸ்திரேலியா அனுமதி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெல்போர்ன்: இந்தியாவின் முன்னணித் தொழில் நிறுவனமான அதானி மைனிங், ஆஸ்திரேலியாவில் தான் நிர்வகித்து வரும் 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கதிற்குத் தேவையான 300 கிலோ மீட்டர் ரயில் பாதையை அமைக்கத் தேவையான அனுமதியைப் பெற்றது. இந்தப் பாதை மூலம் ஆண்டிற்கு 100 மில்லியன் டன்கள் நிலக்கரியை ஆண்டிற்கு கையாளும்.

குயின்ஸ்லாந்து மாகாணப் பொது நிர்வாகி நார்த் கலிலீ பேசின் ரயில் என அழைக்கப்படும் கார்மைக்கேல் சுரங்கத்தையும் அப்பாட் நிலக்கரி முனைமத்தையும் இணைக்கும் இந்த 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரயில் பாதைக்கான அனுமதியை அறிவித்தார்.

மின் தட்டுப்பாடு

மின் தட்டுப்பாடு

இந்த பதினைந்து பில்லியன் டாலர் மதிப்புள்ள நிலக்கரிச் சுரங்கத் திட்டம், இந்தியாவில் உள்ள 10 கோடி பேருக்கு மின்சாரம் கிடைக்க வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

"அதானி குழுமம், நாட்டின் திட்டக் கூட்டாளிகள் மற்றும் அரசின் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து பணிபுரிந்து தன் பிற துறைமுகம் மற்றும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களின் வெற்றிப் பணியை இதிலும் நிரூபிக்க மும்முரமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும், பல தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துள்ளது" என அந்த நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொஸ்கோ இ அண்ட் சி

பொஸ்கோ இ அண்ட் சி

அதானியின் இந்த வளர்ச்சி, கடந்த மாதத்தில் கொரிய நிறுவனமான பொஸ்கோ இ அண்ட் சி நிறுவனம் தன்னுடைய பொறியியல் கட்டமைப்பு திட்டங்களின் கூட்டு நிறுவனமாக அதானியை அறிவித்ததைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில் பாதைத் திட்டம்

ரயில் பாதைத் திட்டம்

இந்த ரயில் பாதைத் திட்டம் தயாராக இரண்டு வருடங்கள் பிடிக்கும் என்றும், இந்த காலகட்டத்தில் மக்காய் பகுதியில் 790 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கும், 900 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான அளவிற்கும் நிதியை நாட்டின் பொருளாதாரத்திற்குள் கொண்டுவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

100 மில்லியன் டன் நிலக்கரி

100 மில்லியன் டன் நிலக்கரி

இந்த சராசரி அகல பசுமைவழி ரயில் பாதை வருடத்திற்கு 100 மில்லியன் டன்கள் நிலக்கரியைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். குயின்ஸ்லாந்து மாகாண இணை முதன்மைத் தலைவர் ஜெஃப் சீனெய் சுமார் 2400 வேலைவாய்ப்புகள் இந்த ரயில் பாதைத் திட்ட அனுமதியினைத் தொடர்ந்து உருவாக்க முடியும் என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Australia approves $2 bn rail line for Adani project

Indian conglomerate Adani Mining on Thursday won state approval to build a 300-km rail line for its $15 billion Carmichael coal mine project in Australia that will enable transportation of 100 million tonnes of coal a year after construction.
Story first published: Monday, August 18, 2014, 16:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X