உலகம் முழுவதுமே சமூக வலைதளங்கள் பயன்பாடு பரவலாக அதிகரித்துவிட்டது . குறிப்பாக டீனேஜர்ஸ் எனப்படும் பதின்ம வயதினர் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பதின்ம வயதினர் அதிகம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக தொடர்ந்து கவலைகள் எழுப்பப்பட்டு வந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்காவில் சமூகவலைதளங்கள் பயன்படுத்தும் குழந்தைகளில் 40% பேர் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதிகம் சமூக வலைதளம் பயன்படுத்தும் குழந்தைகள் சமூகத்தோடு இணைந்து செயல்படாமலும் உளவியல் ரீதியான பாதிப்புக்கும் ஆளாகுகின்றனர். இத்தகைய சூழலில் ஆஸ்திரேய அரசு 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா பிரதமர் வரும் டிசம்பர் 10 ஆம் தேதியிலிருந்து ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டிலேயே இது தொடர்பான சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது . ஆன்லைன் பாதுகாப்பு சட்ட திருத்தம் (சமூக ஊடக குறைந்தபட்ச வயது )மசோதா என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் வரும் டிசம்பர் 10ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது இதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக் டாக், எக்ஸ், ஸ்நாப் சாட் ,யூடியுப், ரெடிட் மற்றும் கிக் போன்ற சமூக வலைத்தளங்களை இனி பயன்படுத்த முடியாது.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் ஆஸ்திரேலியா பிரதமர் இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது இந்த உலகிற்கே முன்னோடியான ஒரு சமூக வலைத்தள தடை சட்டத்தை நாம் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறோம் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம் என தெரிவித்திருக்கிறார். இதன்படி சமூக வலைத்தள செயலிகளை செயல்படுத்தக்கூடிய நிறுவனங்கள் தங்களுடைய தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது .
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கணக்கு தொடங்க வேண்டும் குறிப்பாக அதற்கு பெற்றோரின் அனுமதியும் இருக்க வேண்டும் என்ற விதி அமலில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் இது சரியான முறையில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் பதின்ம வயதினர் தடையின்றி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் ஆஸ்திரேலிய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை கொண்டு வந்திருக்கிறது. ஏற்கனவே டென்மார்க் நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications