ஈரான் போர் உலகம் முழுவதுமே கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு மாற்று ஆதாரங்கள் மூலமாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துகிறது.
அடுத்த 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து நின்று போனதால் மாற்று ஆதாரங்கள் மூலம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை, எனர்ஜி லாக்டவுன் போன்ற சூழலோ இல்லை. ஆனால் அண்டை நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பாகிஸ்தான் , இலங்கை ஆகிய நாடுகளில் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெருமளவு உயர்வு கண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸில் எனர்ஜி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. ஆஸ்திரேலியால தற்போது கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆஸ்திரேலியா அரசாங்கம் விக்டோரியா மற்றும் தாஸ்மானியா ஆகிய மாநிலங்களில் பொதுமக்களுக்கு இலவச பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா மாநிலத்தில் ஒரு மாத காலத்திற்கு மக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். தாஸ்மானியாவில் ஜூலை 1ஆம் தேதி வரை மக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இலவசம் என்பதால் மக்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதையோ இதற்காக பெட்ரோல் டீசல் வாங்குவதையோ குறைத்துக் கொள்வார்கள், இதனால் எரிபொருள் சேமிக்கப்படும் இருக்கக்கூடிய குறைந்த அளவு இருப்பினை சாமர்த்தியமாக பயன்படுத்தும் வகையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இது தவிர ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.பெட்ரோல், டீசல் கிடைக்காமல் பல்வேறு மக்களும் தவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பணவீக்கம் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேற்காசிய போர் முடிவுக்கு வந்து எண்ணெய் விநியோகம் சீரடைந்தால் மட்டுமே இந்த நிலைமை சரியாகும் என ஆஸ்திரேலிய மத்திய வங்கி கூறி இருக்கிறது.
மேலும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் என்ற எச்சரிக்கையும் எடுத்திருக்கிறது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசு தனியார் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை வாங்குவதற்கான விதிகளை தளர்த்தி இருக்கிறது.ஈரான் நாட்டு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications