சீன நிறுவனங்களுக்கு செக் வைத்து வரும் அமெரிக்கா.. தடுக்கும் முயற்சியில் சீனா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க பங்கு சந்தைகளில் இருந்து சீன நிறுவனங்களை நீக்குவது தொடர் கதையாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்தது.

குறிப்பாக சீன நிறுவனங்கள் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவது வாடிக்கையான விஷயமாக இருந்து வந்தது.

உலக நாடுகள் அச்சம்

உலக நாடுகள் அச்சம்

குறிப்பாக டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போர், மிக மோசமான இருந்து வந்தது. இதனால் உலக நாடுகளே அச்சம் கொண்டன. ஏனெனில் அமெரிக்கா மட்டும் அல்ல, அமெரிக்காவின் நடவடிக்கை மற்ற நாடுகளையும் சீன நிறுவனங்கள் மீது அச்சம் கொள்ள வைத்தது.

சீன நிறுவனங்களுக்கு தடை

சீன நிறுவனங்களுக்கு தடை

சீன நிறுவனங்களை பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றுதல், அமெரிக்காவில் தடை செய்யப்படுதல், குறிப்பாக தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களை தடை செய்தார் அப்போதைய அதிபர் டிரம்ப். இதன் பிறகு அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றார். அதன் பிறகு அமெரிக்கா சீனா பிரச்சனை என்பது அமைதி போராக இருந்து வந்தது.

பல மணி நேரம் பேச்சு வார்த்தை

பல மணி நேரம் பேச்சு வார்த்தை

எனினும் கடந்த வாரத்தில் அமெரிக்க அதிபர் பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் காணொளி வாயிலாக பல மணி நேரங்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையானது பெரும் கவனத்தை ஈர்த்தது எனலாம். உலகின் இருபெரும் வல்லரசு நாடுகள் பலமான மோதலுக்கு பின்னர் நடக்கும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இது தான். இந்த பேச்சு வார்த்தையில் வர்த்தக போர், சீன நிறுவனங்கள் தடை, அரசியல் பதற்றம், உள்ளிட்டவற்றை பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு

முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு

இந்த நிலையில் தான் தற்போது அமெரிக்க பங்கு சந்தையில் சீன நிறுவனங்கள் தடை செய்யப்படுவதை தடுக்க, அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க பங்கு சந்தைகளில் சீன நிறுவனங்கள் தடை செய்யப்படுவது நல்ல விஷயமல்ல. குறிப்பாக உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு இதனால் பாதிப்பு என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தணிக்கை விதிமுறைகள்

தணிக்கை விதிமுறைகள்

தற்போது பற்பல வெளி நாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவின் தணிக்கை விதிகளுக்கு பொருந்தவில்லை என்ற நிலையில், பல நிறுவனங்களையும் அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றும் நோக்கில் அமெரிக்க அதிகாரிகள் உள்ளனர். இதற்கிடையில் தான் சீன அதிகாரிகள் நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

இதற்கிடையில் சீனா பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சர்வதேச விவகாரங்கள் துறையின் இயக்குனர் ஜெனரல் ஷென் பிங், ஹாங்கில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், சீன நிறுவனங்களின் அச்சுறுத்தலை தீர்க்க அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்பிரச்சனைகளை தீர்க்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Authorities working hard to stop delisting of china companies in US exchange

Authorities working hard to stop delisting of china companies in US exchange/ சீன நிறுவனங்களுக்கு செக் வைத்து வரும் அமெரிக்கா.. தடுக்கும் முயற்சியில் சீனா.. கவலையில் நிறுவனங்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X