டாகா: நமது அண்டை நாடான பங்களாதேஷ் நாட்டில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. எனவே அந்நாட்டிற்கு முட்டையினை ஏற்றுமதி செய்து இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் போராட்டம் நடந்தது. இது பெரிய வன்முறையாக மாறி அந்நாட்டு அதிபர் மாளிகையையே மக்கள் சூறையாடினர். தற்போது அங்கே போராட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும் நிலைமை இதுவரை சீரடையவில்லை. குறிப்பாக பொருளாதாரம் மோசமாகிவிட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் சாதாரண மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கே பெரும்பாலானவர்கள் அசைவம் உண்பவர்கள் என்பதால் அங்கே முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் அதிகரித்துவிட்டது.
பங்களாதேஷ் நாட்டில் ஒரு டஜன் முட்டையின் விலை 200 டாக்கா என்ற அளவில் அதிகரித்து உள்ளதாம். அதாவது 200 டாக்கா என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 140 ரூபாய் ஆகும். இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் முட்டை வாங்குவதையே நிறுத்தி விட்டன.
நாட்டில் முட்டையின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் சூழலில் வங்கதேச அரசு இதற்காக இந்தியாவின் உதவியை நாடியது. இதனை அடுத்து தற்போது மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவிலிருந்து 2.31 லட்சம் முட்டைகள் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
பங்களாதேஷ் நாட்டில் உள்ள பெனாபுல் துறைமுகம் வழியாக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 2.31 லட்சம் முட்டைகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. அவை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. பங்களாதேஷ் நாட்டில் முட்டையின் விலையை குறைப்பதற்காக அந்த நாட்டு அரசு 4.5 கோடி முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது என அறிவித்தது. இதன் மூலம் உள்நாட்டில் முட்டையின் விலை குறையுமென அரசு நம்புகிறது.
நாட்டில் நிலவிய வன்முறை போராட்டங்கள் காரணமாக முட்டை இறக்குமதி தாமதமான நிலையில் மீண்டும் அது வேகமெடுத்துள்ளது என அங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தியாவில் இருந்துதான் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என சொல்லப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து 90 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் நாட்டில் முட்டைக்கான இறக்குமதி வரி 25 சதவீதமாக இருந்து தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டையின் விலையும் குறைந்துள்ளதாக தெரிகிறது. வங்க தேச அரசின் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி அந்நாட்டிற்கு ஒரு நாளைக்கு 4 கோடி முட்டைகள் தேவைப்படுகிறதாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications