ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க 'ஆளில்லா வங்கி' சேவை.. பாங்க் ஆஃப் அமெரிக்கா புதிய திட்டம்..!
வாஷிங்டன்: உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் அமெரிக்கா கடந்த ஒரு மாதத்தில் 3 ஆளில்லா வங்கி கிளைகளைத் துவங்கியுள்ளது.
இக்கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளில் இருக்கும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஊழியர்களிடம் பேசவும், வீடியோ கான்பெரன்ஸ் மூலம் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும் என இவ்வங்கியின் செய்தி தொடர்பாளர் அனி பேஸ் தெரிவித்துள்ளார்.
பாங்க் ஆஃப் அமெரிக்கா
அமெரிக்காவில் பல வங்கிகள் செய்ததைப் போலவே பாங்க் ஆஃப் அமெரிக்காவில் குறைந்த வருமானம் அளிக்கும் வங்கிகளை மூடியது. இதேபோல் பல கிளைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆளில்லா வங்கி
இதன் மூலம் இவ்வங்கியின் செலவுகளை அதிகளவில் குறைந்தாலும், வர்த்தகத்தைத் தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு 'ஆளில்லா வங்கி' என்ற புதிய சேவையை அளிக்கத் துவங்கி உள்ளது பாங்க் ஆஃப் அமெரிக்கா.
பிற முக்கியச் சேவை
அமெரிக்காவில் பல வங்கிகள் இதேபோன்ற சேவை அளிக்கிறது இதில் என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் கேட்கலாம், பிற வங்கிகள் வெறும் பணப் பரிமாற்ற பணிகளை மட்டுமே செய்து வரும் நிலையில், பாங்க் ஆஃப் அமெரிக்கா வீட்டுக் கடன், அடமான கடன், கிரேடிட் கார்டு மற்றும் ஆட்டோ லோன் எனப் பல பரிவுகளில் தனிப்பட்ட முறையில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.
சிறிய வங்கி
அமெரிக்காவில் மீன்னாபோலீஸ் மற்றும் டென்வர் பகுதிகளில் இருக்கும் புதிய ஆளில்லா வங்கிக் கிளைகள் முழுமையான சேவை அளிக்கக் கூடியவை. அது சாதாரண வங்கி கிளை அளவில் நான்கில் ஒரு பங்கே இதன் அளவீடு.
60 கிளை துவக்கம்
1 மாத காலத்தில் 3 வங்கி கிளைகளைத் துவங்கி பாங்க் ஆஃப் அமெரிக்கா அடுத்த ஒரு வருடத்திற்கு இதேப்போன்று சுமார் 50-60 ஆளில்லா வங்கி கிளைகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக இவ்வங்கியின் துணை தலைவர் டீயன் தெரிவித்துள்ளார்.
ஆட்டோமேஷன்
இத்தகைய ஆளில்லா வங்கிகளையே ஆட்டோமேஷன் எனக் கூறப்படுகிறது. வங்கி கிளைகளை முழுமையாக மூடினாலும் வங்கிகள் இயல்பாக இயங்கும் அளவிற்கு இந்த ஆளில்லா வங்கிகள் இயங்கும் திறன் வாய்ந்துள்ளது.
இதனால் வங்கித்துறையில் இருக்கும் பல ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும்.
இந்தியா
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை தற்போது ஆளில்லா வங்கி சேவை அளிக்கும் அடித்தளத்தை அமைத்து வருகிறது. இதன் முதல் பகுதிதான் ரோபோ-க்களின் அறிமுகம்.
ஐடி
ஆட்டோமேஷன் என்பது ஐடித்துறையில் மட்டும் வருபவை அல்ல, ஐடி சேவைகளை நம்பி இயங்கும் அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன். இதற்கு முதல் உதாரணம் ஆட்டோமொபைல் துறை.
30 வருடங்களுக்கு முன் வாகன தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கும் நிலையில் தற்போது சில ஆயிரங்கள் ஊழியர்களைக் கொண்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இதே நிலை தான் பிற துறைகளிலும் வரும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications